India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்த போது திமுக ஏன் எதிர்க்கவில்லை என அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், தங்களின் லாபத்துக்காக திமுகவும், காங்கிரஸ் கட்சியும் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். தம்பிதுரையின் பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் சில நிமிடங்கள் கூச்சல், குழப்பம் நிலவியது.
இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் திலக் வர்மா இடம்பெற வேண்டும் என கம்பீர் விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், IPL-க்கு பிறகு காயம் காரணமாக விளையாட முடியாததால், அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் தொடர் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் அல்லாத ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ₹6,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய விலைவாசி சூழலில், மக்கள் குறித்து யோசிக்க மாட்டீர்களா?, ₹6 ஆயிரத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்?, ஒரு நாளைக்கு ₹200 போதுமா? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு 3 ஆண்டுகளாக வழங்கவில்லை என திமுக எம்.பி. சண்முகம் விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், மத்திய நிதியமைச்சர் தமிழராக இருந்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். பட்ஜெட்டில் பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 100 நாள் வேலை நாட்களை உயர்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி மேனன், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள “தங்கலான்” படத்திற்கு தணிக்கைக்குழு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில், விக்ரமின் கெட் அப், ஜி.வி.பிரகாஷின் இசை, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் என அனைத்தும் மிரட்டலாக இருந்தது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ஆக.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பூமியில் 8ஆவது கண்டமொன்று இருப்பதாக சுவீடனின் உப்சலா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களது ஆய்வில், ஆர்க்டிக் கடலில், கனடா – கிரீன்லாந்து இடையே டேவிஸ் நீரிணை இருக்கும் பகுதியில் 6 கோடி ஆண்டுக்கு முன் உருவாகிய நீளம் 402 கி.மீ கொண்ட கண்டம் இருப்பது தெரியவந்துள்ளது. புவித்தட்டுகள் நகர்வதால் ஒரே நிலப்பரப்பு கண்டங்களாக பிரிவதும், ஏற்கெனவே இருந்த நிலப்பரப்பு மூழ்குவதும் நடக்கிறது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்துவதற்காக, ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதை தவிர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியுடன், டென்னிஸ் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 2012, 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவுகளில் அவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இளநிலை நீட் தேர்வுக்கான திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் NTA இணையதளத்தில் வெளியானது. முழு மதிப்பெண் எடுத்த 44 மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. புதிய தரவரிசை பட்டியல் 2 நாள்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு 2 சரியான விடைகள் வழங்கப்பட்ட விவகாரத்தில், 1 விடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால், மொத்தம் 4 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுக்கு பின்னான ஒரே நாளில், அதானியின் சொத்து மதிப்பு ₹6,060 கோடி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அவரது சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்த போதிலும், அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதேவேளையில், அம்பானியின் நிறுவனம் ₹9,200 கோடி இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.