India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆரோக்கியமான ஜொலிக்கும் சருமத்தை பெற இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெல்லத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்டுகளும், பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகளும் நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்க பப்பாளி சாப்பிடலாம். நெல்லிக்காய், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு பழங்களும் தோல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என பரிந்துரைக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உ.பியை சேர்ந்த பாஜக எம்பி அருண் குமார் சாகர் வலியுறுத்தியுள்ளார். தலித்துகள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடன் வாழ கன்ஷி ராம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் மகாராஷ்டிரா அணி கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அந்த அணியின் கேப்டனாக கேதர் ஜாதவ் இருந்தார். மகாராஷ்டிரா அணியின் முக்கிய வீரரான ருதுராஜ் கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் அந்த அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனையடுத்து இந்த முறை அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை (ஜூலை 26ஆம் தேதி) ஒவ்வொரு இந்தியருக்கும் மிக முக்கியமான நாள் என்று பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘கார்கில் விஜய் திவாஸ்’ (கார்கில் வெற்றி தினம்) தினமான அன்று, நமது நாட்டைக் காத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தானும் கார்கில் போர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் அகீம் ஜோர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்டில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெர்மையா லூயிசுக்கு பதிலாக அகீம் ஜோர்டன் அணியில் இடம்பிடித்துள்ளார். அகீம் ஜோர்டன் 19 முதல் தர போட்டிகளில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் நாளை ( ஜூலை 26) வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வு முடிவை அறிந்துக் கொள்ளலாம். மேலும், 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதியும் வெளியாகிறது.
வன விலங்குகளால் உயிரிழப்போரின் கருணைத் தொகையை ₹5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ரயிலில் யானைகள் அடிபடுவதை தடுப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி 3ஆவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. வில்வித்தை தகுதிச் சுற்றில், ஆரம்பத்தில் இருந்தே அசத்தலாக விளையாடிய இந்திய வீரர்கள் தீரஜ் – 681, தருந்தீப் ராய் – 674, பிரவீன் ஜாதவ் 658 என மொத்தம் 2013 புள்ளிகள் பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. மேலும், ஒலிம்பிக் போட்டி கலப்பு பிரிவில் இந்திய வில்வித்தை அணி 5ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாருடன் ஒப்பிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். அம்பானி போல் பணம் சம்பாதிக்க ஜெகன் இப்படி செய்ததாகவும், ஜெகனின் ஆட்சியில் ஆந்திரா கஞ்சாவின் தலைநகரமாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், YSRCP ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தான் இதற்கு முன் பார்த்ததில்லை என விமர்சித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமதாஸின் 86ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இருவரும் சில நிமிடங்கள் அரசியல் கடந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.