India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* மேஷம் – சோர்வு, *ரிஷபம் – செலவு, *மிதுனம் – சாதனை *கடகம் – அமைதி, *சிம்மம் – நட்பு, *கன்னி – மகிழ்ச்சி, *துலாம் – வரவு, *விருச்சிகம் – தடங்கல் *தனுசு – நலம், *மகரம் – களிப்பு, *கும்பம் – சுகம், *மீனம் – மேன்மை
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஜார்கண்டில் 2 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏ லோபின் ஹெம்ப்ரோம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெய் பிரகாஷ் படேல் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், இருவரும் கட்சி மாறி வாக்களித்ததால் சபாநாயகர் இவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.
சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கக்கோரி INDIA கூட்டணி சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 30ஆம் தேதி இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால் 100 நாட்களை கடந்து சிறையில் உள்ளார்.
இரவில் தூங்கச் செல்லும் முன் பல் துலக்குவது கட்டாயம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பகல் நேரத்தில் உண்ணும் உணவுகள் அனைத்தும் பற்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதால் இரவில் பல் துலக்காமல் தூங்கும்போது பல் சொத்தை ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனை தவிர்க்க இரவில் ஒரு முறையும் காலையில் ஒரு முறையும் பற்களை துலக்கினால் பற்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்தாண்டு சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய வீரர்கள் பங்கேற்கப் போவதில்லை என்று பிசிசிஐ முடிவெடுத்திருக்கும் நிலையில் ஹர்பஜன் அதை ஆமோதித்துள்ளார். வீரர்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய மூளையாக செயல்பட்ட மேலும் ஒரு வழக்கறிஞரை தனிப்படை போலீஸ் அதிரடியாக கைது செய்தது. மணலி அருகே மாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பரை கைது செய்து, அவரது வீட்டிலிருந்து ₹9 லட்சம் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் தான் ரவுடி சம்போ செந்திலுக்கு பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தை போல வரி செலுத்தினாலும், சோமாலியாவை போலதான் மக்களுக்கு சேவைகள் கிடைப்பதாக ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி, ஜிஎஸ்டி மூலம் பொதுமக்களின் வருமானத்தில் 70 முதல் 80 சதவீதத்தை அரசாங்கம் எடுத்துக்கொண்டதாக தெரிவித்த அவர், இது தொடர்ந்தால் வரும் தேர்தலில் 120 இடங்களை கூட பாஜக பெறாது என விமர்சித்துள்ளார்.
துருக்கியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ரஷ்யாவின் மிக அழகான பைக்கர் என வர்ணிக்கப்படும் தத்யானா ஒசோலினா (38) உயிரிழந்தார். நெடுஞ்சாலையில் BMW இரு சக்கர வாகனத்தில் சென்றபோது டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பலியானர். சாகசப் பயணங்கள் மேற்கொண்டு பிரபலமான ஒசோலினாவுக்கு, டிக்டாக்கில் 50 லட்சம், யூடியூபில் 20 லட்சம், இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.
பாண்டியா மற்ற வீரர்களின் மரியாதையை சம்பாதிக்காதது தான் டி20 கேப்டன் மாற்றத்திற்கு வழி வகுத்ததாக இலங்கையின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்ட் தெரிவித்துள்ளார். ஒரு கேப்டனாக இருக்கும் நபர் அனைவரையும் ஒருங்கிணைத்து சரியான வழியில் அணியை வழிநடத்த வேண்டும் என்ற அவர், அதற்கு பாண்டியாவை விட சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவராக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் தீயணைப்புத்துறை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பேரிடர் தணிப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, ₹810 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட நகரங்களின் வெள்ள மேலாண்மைக்கு ₹2,514 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.