India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஜூலை 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் T20 லீக்கில் நுழைந்துள்ளார். அவர் கர்நாடக மகாராஜா டிராபி லீக்கில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். கருண் நாயர் தலைமையிலான அந்த அணியில் விளையாட உள்ள சமித் ₹50,000க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இந்த T20 லீக்கில் மைசூருடன் ஹூப்ளி டைகர்ஸ், ஷிவமொக்கா லயன்ஸ், குல்பர்கா மிஸ்டிக்ஸ், பெங்களூர் பிளாஸ்டர்ஸ், மங்களூர் டிராகன்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
இன்று (ஜூலை 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜா சாகர், சாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ணராஜா சாகர் அணையிலிருந்து 80,000 கன அடி வரை நீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காவிரியில் கடந்த பத்து நாள்களாக பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ இளநிலை நீட் தேர்வுக்கான திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியானது.
➤ நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
➤ முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் திட்டம் இல்லை -மத்திய அரசு.
➤ முதல்வர் ஸ்டாலினுடன் ஐக்கிய அமீரக வர்த்தக அமைச்சர் அப்துல்லா பின் தெளக் சந்திப்பு
➤ தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்
அன்னாசி பித்த கோளாறுகளை விரைந்து குணமாக்கும் அருமருந்தாக விளங்குவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அன்னாசியில் வைட்டமின் சி சத்து செறிந்துள்ளது. மேலும், ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால், இதனை தினமும் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. நார்ச்சத்து இதில் அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரபல அறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்பார் ஹால் மற்றும் அசோக் ஹால் ஆகியவை முறையே கணதந்திர மண்டபம் மற்றும் அசோக் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் தர்பார் ஹாலில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
நமது உடல் எடையை குறைப்பதற்கு இருக்கும் ஒரே வழி கலோரி குறைபாட்டை ஏற்படுத்துவது மட்டும்தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நாளொன்றுக்கு நமது உடலுக்கு தேவைப்படும் கலோரிகளை விட, நாம் குறைவான கலோரிகளை உட்கொண்டால் உடல் எடை தானாக குறையத் தொடங்கும். எனவே, தினமும் நன்றாக உடற்பயிற்சி செய்து, குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகளை உட்கொள்வது மட்டுமே ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்கும் ஒரே வழி என்கிறார்கள்.
குரோஷியா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது. யூகி பாம்ப்ரி – அல்பானோ ஜோடி, பிரான்சின் மானுவல் கினார்டு – கிரிகோரி ஜாக் ஜோடியை எதிர்கொண்டது. இதில், முதல் செட்டை பிரான்ஸ் ஜோடி 6-4 என கைப்பற்றியது. 2ஆவது செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 6-1 என்று கைப்பற்றியது. இறுதி செட்டை பிரான்ஸ் ஜோடி 10-6 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.
Sorry, no posts matched your criteria.