news

News July 26, 2024

காமராஜர் பொன்மொழிகள்

image

▶நேரம் தவறாமல் இருப்பவர் என்றும் கதாநாயகன் தான். ▶நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமம். ▶பணம் இருந்தால் தான் மரியாதை என்றால், அந்த மரியாதையே தேவையில்லை. ▶ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது, குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதற்கு சமம். ▶சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும். ▶எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.

News July 26, 2024

Olympics 2024: இன்று முதல் தொடங்குகிறது

image

33ஆவது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இன்று தொடங்குகிறது. இதில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டிகள் இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. ஒலிம்பிக்கில் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

News July 26, 2024

ராயனை வாழ்த்திய நடிகர் கார்த்தி

image

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படம் இன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், SJ சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் வெற்றியடைய நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனுஷின் அயராத உழைப்புக்கும், சினிமா மீதான ஆர்வத்துக்கும் இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள் என கூறியுள்ளார். யாரெல்லாம் இப்படத்திற்கு வெயிட்டிங்?

News July 26, 2024

ஜூலை 26: வரலாற்றில் இன்று!

image

* 1803: உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
* 1856 – ஐரிய எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம் இன்று
* 1974 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
* 1999 – கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது
* 2005 – மும்பையில் 24 மணி நேரத்தில் பெய்த கனமழையில் 5,000 பேர் உயிரிழந்தனர்.

News July 26, 2024

இன்று அரையிறுதிப் போட்டிகள்

image

ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி ஜூலை 28 (ஞாயிறு) ஆம் தேதி நடைபெற உள்ளது. எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும்?

News July 26, 2024

நீட் வினாத்தாள் கசிவு: இதுவரை 36 பேர் கைது

image

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக பிஹாரில் 15 பேர் உட்பட மொத்தம் 36 பேரை கைது செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நீட் வினாத்தாள் பெற்ற அனைத்து மாணவர்களையும் கண்டறியும் சோதனை நடைபெற்று வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

News July 26, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 427 ▶குறள்: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். ▶பொருள்: அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

News July 26, 2024

IPL: ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம்?

image

ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதிக்கும் என்று தெரிகிறது. இதில் நான்கு உள்ளூர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து வரும் 31ஆம் தேதி நடைபெறும் பிசிசிஐ-ஐபிஎல் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். எட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள உரிமையாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

News July 26, 2024

‘இந்தியன்-2’ படத்தின் நீளத்தை குறைக்க வேண்டும்: அம்பிகா

image

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியான ‘இந்தியன்-2’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் நீளமாக இருப்பதாக கூறப்பட்டதையடுத்து படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகை அம்பிகா படத்தில் மேலும், 15 நிமிட காட்சிகளைக் குறைத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

News July 26, 2024

இந்த மாவட்டங்களில் விடிய விடிய மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அதிகாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், அரியலூர், பெரம்பலூர், கடலூரில் மிக லேசான மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!