India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ என்று ஆன்மிகம் சொல்கிறது. அதேபோல், எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு இணையாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி வெள்ளியன்று ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் அம்பாளைக் காண கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் இல்லம் தேடி வரும் என்பது ஐதீகம் ஆகும்.
➤ பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று முதல் தொடக்கம்
➤ கர்நாடக சட்டசபையில் நீட் ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
➤ தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
➤ பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தையில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு தகுதி
➤ தமிழ்நாடு, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் தீயணைப்புத்துறை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து அனுமதி தர வேண்டும் என்றும், பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கையை EMISஇல் புகைப்படத்துடன் பதிவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ப்ளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். மாணவர்கள் <
வார இறுதியையொட்டி இன்று முதல் ஜூலை 28 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும், நாளை 290 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல், பெங்களூரு, திருப்பூர், கோவையில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப்பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு தங்கி படிக்கும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். கடந்த 3 நாள்களில் 166 மாணவர்கள் தமிழகம் திரும்பிய நிலையில், நேற்று மேலும் 42 மாணவர்கள் கொல்கத்தாவில் இருந்து தமிழக அரசின் உதவியால் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.
▶ஜூலை – 26 | ▶ஆடி – 10 ▶கிழமை: வெள்ளி ▶திதி: சஷ்டி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶சந்திராஷ்டமம்: மகம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
CGLE-2024க்கான விண்ணப்ப காலக்கெடுவை பணியாளர் தேர்வு ஆணையம் நீட்டித்துள்ளது. மொத்தம் உள்ள 17,727 பணியிடங்களுக்கான ஜூலை 24ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், ஜூலை 27ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கட்டணம் செலுத்த இம்மாதம் 28ஆம் தேதி கடைசி நாள். பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
➤எடை குறைப்புக்காக காலை உணவை தவிர்க்கக் கூடாது. ➤காலை உணவை தவிர்ப்பதால் கவனக்குறைவு ஏற்படும். ➤காலை உணவாக துரித உணவுகளை சாப்பிடக் கூடாது. ➤பழங்கள், பழச்சாறுகளை காலையில் சாப்பிடுவது சிறப்பு ➤ இனிப்பான உணவை தவிர்ப்பது நல்லது. ➤ ஆவியில் வேகவைத்த இட்லி, காலையில் பொருத்தமான உணவாக இருக்கும். ➤ அதேபோல, சிறுதானிய உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 ஆண்டுகளை நிறைவு செய்து குடியரசுத் தலைவராக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில், ஒடிசாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒருநாள் ஆசிரியராக மாறி 9ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். புவி வெப்பமயமாதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய அவர், நீர் பாதுகாப்பின் அவசியத்தையும் அவர்களுக்கு வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.