news

News July 26, 2024

இந்தியா vs இலங்கை T20: அதிகம் வென்றது யார்?

image

இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 29 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 19இல் வெற்றி பெற்றுள்ளது. 2017இல் இந்தூரில் நடந்த போட்டியில் அதிகபட்சமாக 260 ரன்களை இந்தியா குவித்துள்ளது. ரன்கள் அடிப்படையில், கட்டாக்கில் 2017 போட்டியில் 93 ரன் வித்தியாசத்திலும், விக்கெட் அடிப்படையில் விசாகப்பட்டினத்தில் 2016 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

News July 26, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே, பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், அலுவலகம் செல்வோர், குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

News July 26, 2024

நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகும் ராகுல்

image

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி உ.பி., மாநிலம் சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார். 2018ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவர் அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்கு உரிய கருத்து கூறியதாக அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ராகுலுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், இன்று ( ஜூலை 26) நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டிருந்தார்.

News July 26, 2024

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வாங்கியோர் கவனத்திற்கு…

image

UIDAI ஆணையத்தால் வழங்கப்படும் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம் ஆகும். அப்போதுதான் அதில் உள்ள தகவல்கள் துல்லியமாக இருக்கும். சில தகவல்களை ஆதார் ஆணைய இணையதளம் மூலம் நாமே இலவசமாக புதுப்பிக்கலாம். புகைப்பட மாற்றம் போன்றவற்றை ஆதார் ஆணையம், இசேவை மையத்துக்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தி மாற்றலாம்.

News July 26, 2024

கனமழை: இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா ஆகிய 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை பெய்வதால், மாணவர்கள் தேவையில்லாமல், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 26, 2024

இந்தியா, இலங்கை டி20 தொடர் நாளை தொடக்கம்

image

இந்தியா, இலங்கை அணிகள் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி நாளை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிகளை நேரலையில் Sony குழும தொலைக்காட்சிகளில் காணலாம். Ott எனில், Sony Liv ottயில் கட்டணம் செலுத்தி பார்க்கலாம். ஆன்லைனில் இலவசமாக பார்க்க வேண்டும் என்றால் ஜியோ டிவி ஆப்பில், sony சேனல்களை வைத்து பார்க்க முடியும்.

News July 26, 2024

ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான கருவிதான் இசை: அறிவு

image

சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கருவியாகவே இசையை கருதுவதாக பாடகர் தெருக்குரல் அறிவு கூறியுள்ளார். மக்கள் இசைக் கலைஞர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் தனி இசை மீது தனக்கு பற்று ஏற்பட்டதாகக் கூறிய அவர், அந்த இசையையே நவீன வடிவில் ‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற 12 பாடல்கள் கொண்ட புதிய இசை ஆல்பமாக உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் .

News July 26, 2024

எச்.ஐ.வி தொற்றுக்கு புதிய மருந்து

image

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பல்கலைக்கழக எச்.ஐ.வி மைய ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக நடத்திய ஆய்வு 100% வெற்றி பெற்றதாகத் தெரியவந்துள்ளது. இந்த ஊசியை ஆண்டுக்கு 2 முறை செலுத்திக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் குணமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மேலும் பல கட்ட சோதனைக்குப் பின்னரே இது விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

News July 26, 2024

APPLY: சிபிஐ அமைப்பில் வழக்கறிஞர்களுக்கு வேலை

image

CBI சார்பில் மும்பை, கல்யாண், தானே, புனே, நாக்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாட வழக்கறிஞர்கள் 3 ஆண்டுகால அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆக.12 கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பிக்க எல்எல்பி பட்டம், 10 ஆண்டு காலத்துக்கு வழக்கு விசாரணைகளில் ஆஜராகிய அனுபவம் அவசியம்.

News July 26, 2024

5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல், நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!