news

News July 26, 2024

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக…

image

ஒலிம்பிக்ஸில் வரலாற்றில் முதல்முறையாக, பாரிஸில் மைதானத்தில் அல்லாமல் திறந்தவெளியில் நதியில் அதன் தொடக்க விழா நடக்கவுள்ளது. 10,500 வீரர்கள் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தி அணிவகுத்து, சென் ஆற்றில் 94 படகுகளில் 6 கி.மீ., தூரம் பயணிக்கவுள்ளனர். தொடக்க விழா நிறைவு நிகழ்ச்சி ட்ரோகாடெரோ என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. அங்கு ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, போட்டிகள் முறைப்படி தொடங்கும். <<-se>>#Olympics2024<<>>

News July 26, 2024

இதுமட்டும் நடந்தால் JIO, Airtel -க்கு கடும் சவால்

image

JIO, Airtel மற்றும் Vodafone & Idea ஆகியவை ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்துள்ளதால், அனைவரின் பார்வையும் BSNL பக்கம் திரும்பியுள்ளது. அதன் ரீசார்ஜ் திட்ட விலைகள் குறைவாக உள்ளன. ஆனால், மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், BSNL 4ஜி சேவையை வழங்க முடியாமல் திணறுகிறது. மத்திய அரசு BSNL-ஐ ஆதரித்து 5G கொண்டு வந்தால், பயனர்கள் அந்த நெட்வொர்க்கிற்கு செல்ல தயாராக உள்ளனர்.

News July 26, 2024

செப்டம்பரில் இலங்கை அதிபர் தேர்தல்

image

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் தற்போதை அதிபர் ரணில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, கடைசிக்கட்ட போரின்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பென்சேகா களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News July 26, 2024

JOBS: சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு (1/2)

image

சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார திட்டத்தில் காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், தொற்றுநோய் நிபுணர் (1), மருத்துவ அதிகாரி (28), செவிலியர் (71) லேப் டெக்னீசியன் (33), பார்மசிஸ்ட் (8), எக்ஸ் ரே டெக்னீசியன் (5), ஆக்சிலரி நர்ஸ் (70), ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் (3), அக்கவுண்ட் அசிஸ்டெண்ட் (1) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News July 26, 2024

JOBS: சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு (2/2)

image

வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை <>www.chennaicorporation.gov.in<<>> என்ற மாநகராட்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதற்கான சான்றிதழ்களை இணைத்து தபால் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி “The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon buildings, Chennai- 600003” ஆகும். விண்ணப்பங்களை ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுப்பலாம்.

News July 26, 2024

ஒலிம்பிக்ஸில் இந்தியா எப்போது கால் பதித்தது?

image

124 ஆண்டுகளுக்கு முன்பு 1900இல் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸில்தான் இந்தியாவின் பெயர் முதன்முறையாக ஒலித்தது. அதில், கொல்கத்தாவில் பிறந்த பிரிட்டிஷ் இந்தியரான நார்மன் பிரிட்சார்ட், 200 மீ., ஓட்டத்தில் கலந்துகொண்டு, வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் பிரிட்டனின் சார்பில் விளையாடியதாக சர்ச்சையான போதிலும், அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகவே IOC பதிவு செய்துள்ளது. <<-se>>#Olympics2024<<>>

News July 26, 2024

மாத சம்பளதாரருக்கு இனி எவ்வளவு வருமான வரி? (1/2)

image

2024 பட்ஜெட்டில் வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரருக்கு அளிக்கப்படும் நிரந்தர கழிவுத் தொகை ₹50,000இல் இருந்து ₹75,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வரி விகிதத்தின்கீழ் இனி ₹7 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி கிடையாது. பழைய வரி விகிதத்தின்கீழ் வரி செலுத்துவோர் எனில், ₹2 லட்சத்துக்கு காப்பீடு, செலவு உள்ளிட்ட கணக்குகளை தாக்கல் செய்தால் வரி செலுத்த வேண்டாம்.

News July 26, 2024

பொங்கலுக்கு ‘SK23’ ரிலீஸ்?

image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘SK23’ படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அனிருத் இசையில் ஏற்கெனவே 2 பாடல்கள், முக்கிய சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து நவம்பரில் ட்ரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 26, 2024

மாத சம்பளதாரருக்கு இனி எவ்வளவு வருமான வரி? (2/2)

image

ஆண்டு வருமானம் ₹9 லட்சம் எனில், பழைய வரி விகிதத்தின்கீழ் ₹96,200 வரி செலுத்த வேண்டும். அதேநேரம் அவர் ₹2 லட்சம் முதல் ₹3 லட்சம் வரை கணக்குகள் தாக்கல் செய்தால், வருமான வரியை ₹33,800 வரை குறைக்க முடியும். ₹4 லட்சத்துக்கு கணக்கு தாக்கல் செய்தால் ₹1 கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், புதிய வரி விகிதம் எனில், அவர் கட்டாயம் ₹46,800 வருமான வரி செலுத்த வேண்டும்.

News July 26, 2024

ஒலிம்பிக்ஸ் திருவிழாவை கொண்டாடும் சிறப்பு டூடுல்

image

124 ஆண்டுகள் கழித்து பாரிஸில் நடக்கும் 33ஆவது ஒலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இன்று கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலில், வாத்து உள்ளிட்ட பறவைகள் நீரில் பயணிப்பது போல குறியீடு வைக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல்முறையாக தொடக்க விழா மைதானத்தில் நடத்தப்படாமல், (செயின்) ஆற்றங்கரையில் நடைபெறவுள்ளது. அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!