news

News July 26, 2024

ஒலிம்பிக்: முதல்முறை இந்திய கொடி ஏந்தி சென்றது யார்?

image

ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது நடைபெறும் அணிவகுப்பில் அந்தந்த நாட்டின் தேசிய கொடியை ஏந்தி ஒருவர் முன் செல்வது வழக்கம். இந்தியா சார்பில் முதல்முறையாக கொடியை ஏந்திச் சென்ற பெருமை கொல்கத்தா ஓட்டப்பந்தய வீரர் சி. பானர்ஜியை சேரும். பெல்ஜியத்தில் 1920இல் நடந்த போட்டியில் அவர் கொடியை ஏந்திச் சென்றார். 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பிவி சிந்து (தெலங்கானா), சரத்கமல் (தமிழ்நாடு) ஏந்திச் செல்லவுள்ளனர்.

News July 26, 2024

‘B’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

image

‘B’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் வாக்குவாதங்கள், கருத்து மோதல்களில் ஈடுபடுவதை விரும்பாதவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கற்பனை வளம், படைப்புத் திறன், தெளிவான சிந்தனை கொண்ட இவர்கள் காதல் மன்னர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். சந்திரனின் ஆதிக்கம் கொண்ட ‘B’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இதை பகிருங்கள்.

News July 26, 2024

ஆபரணத் தங்கம் விலை குறைவு

image

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹51,320க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ₹6,415க்கும் விற்பனையாகிறது. கடந்த 21ஆம் தேதி ₹54,680க்கு விற்பனையான ஆபரணத் தங்கம் 5 நாளில் ₹3,360 குறைந்துள்ளது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹89க்கு விற்பனையாகிறது.

News July 26, 2024

ராயன் படத்தை பார்த்து மிரண்ட செல்வராகவன்

image

தனுஷ் இயக்கி, நடித்துள்ள தனது 50ஆவது படமான ‘ராயன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன், நடிகராகவும் இயக்குனராகவும் ஒவ்வொரு ப்ரேமிலும் தனுஷ் ஜொலிக்கிறார். உன்னை நினைத்து ஒரு அண்ணனாக பெருமைப்படுகிறேன். படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை தனி உலகத்துக்கு கூட்டிச் செல்கிறது என பாராட்டியுள்ளார்.

News July 26, 2024

விளையாட்டில் அரசியல் வரக்கூடாது: சோயிப் மாலிக்

image

பாகிஸ்தானுக்கு வரும் இந்திய அணிக்கு சிறந்த வரவேற்பையும் விருந்தோம்பலையும் கொடுப்போம் என்று அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னை தனியாக பேசி தீர்க்கப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்ட அவர், விளையாட்டில் அரசியல் விவகாரங்கள் கலந்திடக் கூடாது என்றார். அத்துடன், சாம்பியன்ஸ் கோப்பை விளையாட இந்திய அணி வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

இன்று கார்கில் போரின் 25ஆவது ஆண்டு வெற்றி தினம்

image

1999 மே 3 தேதி, பாக். ஆதரவு தீவிரவாதிகள், கார்கிலை திடீரென ஆக்கிரமித்தனர். ஏற்கெனவே 3 போர்களில் அடைந்த தோல்விக்கு பழிவாங்க பாக். ராணுவமும் கார்கிலுக்குள் ஊடுருவியது. இதையடுத்து “ஆபரேஷன் விஜய்” என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து அவர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இதில் பாக். தரப்பில் 4,000 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்தப் போரின் 25ஆவது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

News July 26, 2024

Olympics2024: மாநில வாரியாக எத்தனை வீரர்கள்?

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் சார்பில் 117 வீரர் (112+5 மாற்று வீரர்கள்) பங்கேற்கின்றனர். ஹரியானா – 24, பஞ்சாப் – 19, தமிழ்நாடு – 13 , உ.பி., – 7, கர்நாடகா – 7, கேரளா – 6, மகாராஷ்டிரா – 5, டெல்லி – 4, உத்தரகாண்ட் – 4, தெலங்கானா – 4, ஆந்திரா – 4, மேற்கு வங்கம் – 3, ம.பி., சண்டிகர், குஜராத், ராஜஸ்தான், மணிப்பூர், ஒடிஷா – தலா 2 வீரர்கள், கோவா, சிக்கிம், பீகார், அசாம், ஜார்கண்ட் – தலா 1 வீரர்.

News July 26, 2024

சூரிய மின் உற்பத்தியில் சாதனை

image

தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 5,512 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சூரிய மின் உற்பத்தியில் 5,398 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது அதிகபட்சமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ஒரே நாளில் 5,512 மெகாவாட் சூரிய சக்தி மூலமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு, முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

News July 26, 2024

‘மைனாரிட்டி’ அரசாக பாஜக அரசை மாற்றியது யார்?

image

தமிழக மக்களின் சரியான தீர்ப்பினால்தான் பாஜக ‘மைனாரிட்டி’ அரசாக மாறியுள்ளதாக திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்வு, விருப்பு-வெறுப்பு இன்றி அனைத்து மக்களையும் ஒன்றாக நடத்திட வலியுறுத்திய அவர், தமிழ்நாட்டையும் வஞ்சிக்கும் போக்கு தொடருமேயானால் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொன்னது போல அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என ஆவேசமாக கூறியுள்ளார்.

News July 26, 2024

டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் சாப்பிடுபவரா…

image

டீயுடன் எண்ணெய்யில் பொரித்த மிக்சர், வடை போன்றவற்றை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்பது குறித்து மருத்துவர்கள் சில ஆலோசனைகளை பரிந்துரைத்துள்ளனர். டீயுடன் எண்ணெய்யில் பொரித்த ஸ்நாக்ஸ் உட்கொண்டால் அஜீரண கோளாறு ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர். கேக், பிஸ்கெட், சாக்லேட்டில் இனிப்பு அதிகம் இருக்கும். டீயுடன் அவற்றை உட்காெண்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!