news

News July 26, 2024

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளி

image

பட்ஜெட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி மறுப்பதாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலங்களவை விதி எண்: 162இன் கீழ் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட INDIA கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அளித்த நோட்டீஸ்களை தன்கர் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

News July 26, 2024

திமுகவில் இருந்து நீக்கம்

image

காஞ்சி மேயர் மகாலட்சுமி ஆதரவாளர்கள் 2 பேரை திமுகவிலிருந்து நீக்கி, கட்சித் தலைமை அறிவித்துள்ளது. மேயர் மகாலட்சுமி மீது அடுக்கடுக்கான புகார் கூறி, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுகவினரே போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து, வரும் 29ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் 2 பேர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

News July 26, 2024

பிஹாருக்கு ₹37,500 கோடி… தமிழகத்திற்கு பூஜ்ஜியமா?

image

2024-25 பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளதாக திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில், தமிழ்நாட்டுக்கு சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. கடந்த ஏப்ரலில் (GST) ₹1,992 கோடி மட்டுமே கொடுத்த பிஹாருக்கு ₹37,500 கோடி அளித்த மத்திய அரசு ₹12,210 கோடியை வழங்கிய தமிழகத்திற்கு ‘0’ ரூபாய் தந்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

News July 26, 2024

‘லால் சலாம்’ பார்த்துதான் அந்த முடிவை எடுத்தேன்: யுவன்

image

‘லால் சலாம்’ படத்தைப் பார்த்த பின்னர்தான் ‘தி கோட்’ படத்தில் மறைந்த பவதாரிணியின் குரலை AI மூலம் பயன்படுத்த முடிவெடுத்ததாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். தான் இசையமைக்கும் எல்லா படங்களுக்குமே அதிக உழைப்பை கொடுப்பதாகக் கூறிய அவர், சில பாடல்களுக்கு எதிரான விமர்சனங்கள் எழுவது வழக்கம் என்றார். அத்துடன், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

ஸ்டாலின் வெளிநாடு செல்ல அனுமதி

image

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக.22ஆம் தேதி ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்காக அனுமதி கோரப்பட்ட நிலையில், மத்திய அரசு 15 நாட்கள் அனுமதியளித்துள்ளது. இந்த பயணத்தின்போது கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார். மேலும், வெளிநாடு பயணத்திற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

News July 26, 2024

ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய பும்ரா

image

2024 ஐபிஎல் தொடரின்போது ரசிகர்கள் எதிர்த்தாலும், MI கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு கொடுக்கவே முயற்சித்ததாக அந்த அணியின் வீரர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு, ரசிகர்களே விமர்சிக்கும் நிலை ஏற்படுவது நம் நாட்டில் சகஜமானதெனக் குறிப்பிட்ட அவர், அப்போது வீரர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து உதவியதாகக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

’ராயன்’ திரைவிமர்சனம்

image

தனுஷ் நடித்துள்ள ’ராயன்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. படம் முழுவதும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி இயக்குநராக கைத்தட்டலை அள்ளும் தனுஷ், நடிகராகவும் விருந்து படைத்துள்ளார். குறிப்பாக இடைவேளை காட்சி கூஸ்பம்ப்ஸ் வரவைக்கிறது. துஷாரா, சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கவனம் ஈர்க்க, ஏ.ஆர்.ரஹ்மான் BGM-மில் மிரட்டியுள்ளார். way2news Ratings-3/5

News July 26, 2024

வருமான வரி: 2 விகிதங்களில் எது சிறந்தது? (1/2)

image

வருமான வரியானது பழைய விகிதம், புதிய விகிதம் என 2 அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. இதில் யார்-யாருக்கு எது சிறந்தது என நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். பழைய விகிதத்தில் ₹5 லட்சம் வரையும், புதிய விகிதத்தில் ₹7 லட்சம் வரையும் வரி செலுத்த வேண்டாம். பழைய விகிதத்தில் ₹5 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம் ஈட்டினால், அரசு ₹12,500 சலுகை தருகிறது. புதிய வரி விகிதத்தில் இது கிடையாது.

News July 26, 2024

வருமான வரி: 2 விகிதங்களில் எது சிறந்தது? (2/2)

image

புதிய விகிதத்தில், கழிவுகள் ரூ.75,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய விகிதத்தில் வீட்டு வாடகை, காப்பீடு, சேமிப்பு, ஓய்வூதியம், வீட்டுக் கடன் வட்டி, அறக்கட்டளை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திருந்தால், அதை காட்டி கழிவுகள் பெறலாம். ஆதலால், அதிக கழிவுகள் இருப்போருக்கு பழைய விகிதமும், கழிவுகள் இல்லாதோருக்கு புதிய விகிதமும் சிறந்தது என்று பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News July 26, 2024

26ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்..?

image

26ஆம் தேதியில் பிறந்தவர்கள் குறித்து நியூமராலஜியில் தெரிவிக்கப்பட்டிருப்பதை இங்கு நாம் காணலாம். 26ம் தேதியில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 8 ஆகும். இவர்களுக்கு உயிர் எண் (பிறந்த தேதி, மாதம், ஆண்டை கூட்டினால் வரும்) 3,5, 6 அமைந்தால் வியத்தகு முன்னேற்றங்களை அடைவார்கள். இவர்களுடைய முன்னேற்றத்தில் நண்பர்களின் பங்கு அதிகமாக இருக்கும். இந்தத் தேதியில் பிறந்த பலரும் சிகரங்களைத் தொட்டுள்ளனர்.

error: Content is protected !!