news

News July 26, 2024

கேரளா, மே.வங்க ஆளுநர்களுக்கு நோட்டீஸ்

image

கேரளா, மே.வங்க ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கேரள மாநில அரசு சார்பில், அம்மாநில அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவை வைத்திருப்பதாக குற்றம்சாட்டி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதேபோல், மேற்குவங்க ஆளுநருக்கு எதிராகவும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 ஆளுநர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

News July 26, 2024

ஜியோ FIBER: 30% கட்டண தள்ளுபடி

image

சிம் கார்டு சேவையை தொடங்கியபோது, “Freedom Offer” என்ற பெயரில் கோடிக்கணக்கானோருக்கு பல மாதங்கள் இலவச சேவையை ஜியோ வழங்கியது. அதேபோல், 5ஜி AIR FIBER வயர்லெஸ் இணையதள சேவையை ஆகஸ்ட் 15 வரை பெறும் வாடிக்கையாளர்களுக்கு “Freedom Offer” ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகையின்கீழ் இன்று முதல் ஆக்.15 வரை அதில் இணைவோருக்கு 30% கட்டண சலுகையும், ரூ.1,000 இணைப்பு கட்டண தள்ளுபடியும் அறிவித்துள்ளது.

News July 26, 2024

அதிமுக கூட்டணிக்கு விசிக, கம்யூனிஸ்டுகள் வர வாய்ப்பு

image

திமுக கூட்டணியில் இருந்து விலகி, அதிமுக கூட்டணிக்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வர வாய்ப்பிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், மாஞ்சோலை விவகாரத்திலும் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக கூறிய அவர், வேங்கைவயல், நாங்குநேரி விவகாரங்களில் திருமாவளவன் அரசை குற்றம்சாட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News July 26, 2024

வெற்றிக்காக அனைத்தையும் செய்வோம்: ஷஃபாலி வர்மா

image

மகளிர் ஆசியக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் மிக முக்கியமானவை என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா கூறியுள்ளார். வீரர்கள் அனைவரும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி போட்டிகளை வெல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறிய அவர், சிறந்த பேட்டிங் குழுவாக உள்ள தாங்கள் அணியின் வெற்றிக்காக முடிந்த அனைத்தையும் செய்வோம் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

News July 26, 2024

சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிகள் விலகல்

image

சவுக்கு சங்கர் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். பெண் போலீசாரை அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, வழக்கிலிருந்து நீதிபதிகள் ரமேஷ், சுந்தர் மோகன் விலகியுள்ளனர்.

News July 26, 2024

இதை செய்யவில்லை என்றால் அவ்வளவுதான்!

image

2023-2024 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை31இல் முடிவடையவுள்ளது. இதற்குள் வரிக் கணக்கு & ரிட்டர்ன் தாக்கல் செய்வது மட்டும் போதாது. ரிட்டர்ன் தாக்கல் முடிந்தவுடன், 30 நாட்களுக்குள் வரி இ-சரிபார்த்தலையும் செய்ய வேண்டும். வரி செலுத்துவோர் ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்து, உரிய தேதிக்குள் இணையத்தில் சரிபார்க்கவில்லை என்றால், அந்த ரிட்டர்ன் கோரிக்கைகள் செல்லாது.

News July 26, 2024

நிதி ஆயோக்: முதல்வர் புறக்கணிக்க இது காரணம்?

image

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்த பின்னணி குறித்து புதுத்தகவல் வெளியாகியுள்ளது. விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்காதது, தமிழகத்தின் பெயர் இடம்பெறாததால் புறக்கணிக்க முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா போல வெளிநடப்பு செய்யலாம் என நிர்வாகிகள் தெரிவித்த யோசனையை முதல்வர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

News July 26, 2024

26ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்..?

image

26ஆம் தேதியில் பிறந்தவர்கள் குறித்து நியூமராலஜியில் தெரிவிக்கப்பட்டிருப்பதை இங்கு நாம் காணலாம். 26ம் தேதியில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 8 ஆகும். இவர்களுக்கு உயிர் எண் (பிறந்த தேதி, மாதம், ஆண்டை கூட்டினால் வரும்) 3,5, 6 அமைந்தால் வியத்தகு முன்னேற்றங்களை அடைவார்கள். இவர்களுடைய முன்னேற்றத்தில் நண்பர்களின் பங்கு அதிகமாக இருக்கும். இந்தத் தேதியில் பிறந்த பலரும் சிகரங்களைத் தொட்டுள்ளனர்.

News July 26, 2024

அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது: ஐகோர்ட்

image

கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசுப் பள்ளிகள் சாதிப் பெயரில் இருக்கலாமா என கேள்வி எழுப்பிய அவர், தெருக்களில் சாதி பெயரை நீக்கியதை போல, அரசு பள்ளிகளில் நீக்கும்படி அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை ஆக.9க்கு ஒத்திவைத்தார்

News July 26, 2024

கார்கில் போரை கதைகளமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்கள்

image

1999ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், தீவிரவாதிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக விரட்டியடித்தது. இந்தப் போரின் 25ம் ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதை கதைகளமாக கொண்டு பாலிவுட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன? * எல்ஓசி கார்கில் – 2003 * ஸ்டம்ப்ட் – 2003 * தூப் – 2003 * லக்சயா – 2004 * தி கார்கில் கேர்ள் – 2020 * செர்ஷா – 2021.

error: Content is protected !!