India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் தான் சரியாக ஆடவில்லை என்று டி20 இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த அவர் பேட்டியில், அடுத்து 30-40 டி20 போட்டிகள் வருகின்றன. அதில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். வரும் போட்டிகளில் அதைப் பார்க்கலாம். சூர்யகுமாரும் நானும் ஒரேமாதிரி சிந்திக்கக் கூடியவர்கள். எங்களது செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
பெண் ஒருவர் தனக்கு செய்வினை வைத்ததாக சீரியல் நடிகர் சதீஷ்குமார் புகார் கூறியுள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து, பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் சதீஷ். சமீபத்தில் பெண் ஒருவர் தன்னுடன் செல்பி எடுக்க கேட்ட போது மறுத்ததால், தனது வீட்டில் செய்வினை வைத்திருப்பதாக அப்பெண் மிரட்டியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி முதல் நிலவுவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களுக்கு மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.
வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி கடந்த 21ஆம் தேதி திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை திமுக நிர்வாகிகள் சிலர் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் உடல்நிலை தனக்கு ஒத்து வரவில்லை என்றும் எப்போது வெளியே வருவேனென்று அவர் கலங்கியதாகவும் தெரிகிறது. இதைக்கேட்ட நிர்வாகிகள், அவருக்கு ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ITR தாக்கல் செய்தவர்கள் ஆதார் OTP வழிமுறை E-Verify செய்யலாம். E-Verify பக்கத்தில், ‘Aadhaar’-ஐ கிளிக் செய்து ‘Continue’’-ஐ அழுத்தவும். அடுத்து, ஆதார் விவரங்களைச் சரிபார்க்க ஒப்புக்கொண்டால், செல்ஃபோனுக்கு OTP வரும். அதை உள்ளிட்டால், வெரிஃபை செய்த தகவலுடன் பரிவர்த்தனை ID தோன்றும் (குறிவைப்பது நல்லது). இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிந்த மொபைலுக்கு IT சரிபார்க்கப்பட்டதாக உறுதிப்படுத்தும் தகவல் வரும்.
கோவை, நீலகிரியில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-வடக்கு அரபிக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மகளிர் ஆசியக் கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தம்புல்லாவில் நடைபெறும் இப்போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்றது. இதையடுத்து, அந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
சென்னை பெரம்பூர் ICF ஆலையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுகிறது. இதுவரை 70 ரயில்களை தயாரித்துள்ள ICF, இந்த நிதியாண்டில் 650 ரயில்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது 5 வந்தே ரயில்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தற்போது 16 பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு இறுதிக்கட்ட பணி நடப்பதாகவும், எதிர்காலத்தில் 24 பெட்டிகளுடன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுத் தாக்கல் செய்ய முடியும் என இபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் என ஏற்கனவே மனுவில் கூறிவிட்டு, பதில் மனுவில் பொதுச் செயலாளர் என கூறியது ஏன்? என நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து, இபிஎஸ் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. தொடர்ந்து, திருத்த மனுவை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல் உள்ளுறுப்புகள் காணாமல் போயிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய மரியுபோல் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் லாரிசா சலேவா, “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக ரஷ்யா செயல்படுகிறது. இறந்தவர்கள் மட்டுமல்ல திரும்பி அனுப்பப்படுகிறவர்களும் மோசமான நிலையிலேயே வருகின்றனர்” என வேதனை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.