news

News July 26, 2024

மல்லிகைப் பூ ஒரு கிலோ ₹600

image

இன்று ஆடி வெள்ளிக் கிழமை என்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆடி மாதம் திருமணம் போன்ற முக்கிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறாத சூழலில், கோயில், வீடுகளில் பூஜை செய்வதற்காக இன்று அதிகளவில் பூக்கள் விற்பனையாகின. இதனால் நேற்று கிலோ ₹200க்கு விற்பனையான மல்லிகை இன்று ₹600ஆக உயர்ந்தது. இதேபோல, முல்லை, கனகாம்பரம், பிச்சிப் பூ, அரளி, ரோஸ் போன்றவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

News July 26, 2024

பிரசவ தழும்புகளை போக்கும் விளக்கெண்ணெய்

image

பிரசவ தழும்புகள் & தசை விரிவு கோடுகளை நீக்கும் ஆற்றலை விளக்கெண்ணெய் கொண்டுள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். நாட்டுச் சர்க்கரையுடன் லேசாக காய்ச்சி எடுத்த விளக்கெண்ணெய்யை சம அளவு எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை தழும்புகள் உள்ள இடங்களில் தடவி (வாரத்திற்கு 2 அல்லது 3 முறை) மசாஜ் செய்ய வேண்டும். 10-15 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் தழும்புகள் மெல்ல மறையும்.

News July 26, 2024

ரஜினியை கண்டு ஷாக் ஆன குழந்தைகள்..!

image

பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த பேரனை நடிகர் ரஜினிகாந்த் தனது காரில் அழைத்துச் சென்று வகுப்பறையில் விட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ரஜினியை பார்த்த அவரது பேரனின் நண்பர்கள் ஆச்சரியமடைந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள செளந்தர்யா, திரைத்துறையிலும், நிஜ வாழ்க்கையிலும் தனது கதாபாத்திரத்தை அப்பா சிறப்பாக செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

News July 26, 2024

சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிக்கலாமா?

image

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த சில ஆலோசனைகளை இங்கு காணலாம். உணவு ஜீரணத்தின் போது ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும். அப்போது தண்ணீர் அதிகம் அருந்தினால் ஜீரணத் திறன் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கின்றனர். உணவில் புரதச்சத்து நிறைந்திருக்கும்போது, தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஜீரண சக்தியை அதிகரிக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்

News July 26, 2024

80 ரன்களில் சுருண்டது வங்கதேசம்

image

ஆசியக் கோப்பை மகளிர் T20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற BAN, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பந்துவீசிய IND அணி வீராங்கனைகள் BAN வீராங்கனைகளை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தனர். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்களில் 80/8 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ரேணுகா சிங், ராதா யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

News July 26, 2024

வாய்ப்புற்று நோயால் இத்தனை பேர் உயிரிழப்பா?

image

நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 80% பேர் பல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய பல் மருத்துவ சங்கத்தின் செயலாளர் அசோக் தோப்லே தெரிவித்துள்ளார். புகையிலை பழக்கம் அதிகமாக உள்ளதால், நாளொன்றுக்கு 8 பேர் வரை வாய்ப்புற்று நோயால் உயிரிழப்பதாகக் கூறிய அவர், நடமாடும் மருத்துவமனைகள் வாயிலாக மக்களிடையே பல் சார்ந்த நோய்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

News July 26, 2024

வாகன உதிரிபாக விற்பனை 10% உயர்வு

image

2023-24ஆம் நிதியாண்டில் இந்திய வாகன உதிரிபாக மொத்த விற்பனை ₹6.14 லட்சம் கோடியாக (10% உயர்வு) உயர்வு கண்டுள்ளது. உதிரிபாக ஏற்றுமதி (5.5%) ₹1.78 லட்சம் கோடியாகவும் இறக்குமதி (3%) ₹1.75 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால், வர்த்தக உபரி ₹2,513 கோடியாக பதிவாகியுள்ளது. வாகன உதிரிபாக உற்பத்தி துறையின் பெரும்பாலான பிரிவுகள், கொரோனா தொற்றுக்கு முன்பிருந்த நிலையை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News July 26, 2024

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்திய பிரமிடுகள்

image

இந்தியாவின் 43ஆவது உலக பாராம்பரிய சின்னமாக அசாம் மாநிலத்தின் அஹோம் அரச வம்சத்தின் மொய்தாம்களை (புதைமேடு) யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் பிரமிடுகள் என அழைக்கப்படும் மொய்தாம்கள் அரச பரம்பரையினர் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். மை-தாம் என்ற அதன் மூலச்சொல்லுக்கு ‘அடக்கம்’ என்பது பொருள். ஐ.நா அமைப்பின் அங்கீகாரத்தை பெறும் வட கிழக்கு இந்தியாவின் முதல் கலாச்சாரச் சின்னம் இதுவாகும்.

News July 26, 2024

அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சி: மோடி

image

இந்திய ராணுவத்தை போருக்கு தயார் நிலையில் எப்போதும் துடிப்புடனும், இளமையாகவும் வைத்திருப்பது தான் அக்னிபாத் திட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இதுவரை ₹1.25 லட்சம் கோடிக்கு மேல் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின்

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த, கோவை 4ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கில், மே 4ஆம் தேதி அவரை, தேனி மாவட்டத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!