India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேலோ இந்தியா திட்டத்தில் நிதி ஒதுக்குவதில் கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜக ஆளும் உ.பி., குஜராத்துக்கு தலா ₹400 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்திற்கு வெறும் ₹20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் கண்டித்துள்ளார்.
ஒடிஷாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் புவனேஸ்வர் மார்க்கத்தில், ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லாத நிலையில், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 முறை சரக்கு ரயிலும், ஒரு முறை பயணிகள் ரயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
‘இன்சைட் அவுட் 2’ அனிமேஷன் திரைப்படம் உலகளவில் ₹12,200 கோடி வசூலித்து, உலக பாக்ஸ் ஆஃபிஸில் அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம், 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஃப்ரோசன் 2’ பட சாதனையை முறியடித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ₹12,100 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. மொத்த படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வரிசையில் ‘இன்சைட் அவுட் 2’ 13ஆவது இடத்தில் உள்ளது.
கார்கில் வெற்றி ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராணுவம் புத்துயிர் பெறவும், வீரர்கள் போருக்கு எப்போதும் தயாராக இருக்கவும் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறினார். இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள காங்., எம்.பி கார்த்தி சிதம்பரம், இத்திட்டம் போதிய பயிற்சியும், பலன்களும் இல்லாத குறுகிய கால திட்டம் என்றும், ராணுவத்திற்கு விரிவான பயிற்சியும், முழு அர்ப்பணிப்பும் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை மகளிர் T20 தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில், சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஷஃபாலி வர்மா 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்த ஜோடி, 11 ஓவர்களில் 83 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
ஆசியக் கோப்பை மகளிர் T20 தொடரின் அரையிறுதிப் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 20 ஓவர்களில் 80/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ரேணுகா, ராதா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய IND அணி 10 ஓவர்களில் இலக்கை (83 ரன்கள்) அடைந்தது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது.
கடந்த சில நாள்களாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.72 என்ற வரலாற்று சரிவை சந்தித்தது. இதனால், டாலர் மதிப்பில் கடன் வாங்கியுள்ள இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுதல், சீன யுவானின் ஏற்ற இறக்கம் மற்றும் RBI நடவடிக்கைகளால் ரூபாய் அழுத்தத்தை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான 7 பேரை பார்த்ததாக ஒரு பெண் கூறிய நிலையில், ஜம்மு பகுதியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணுவப் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய நடவடிக்கை தென்பட்டால் உடனே தெரிவிக்கவும் கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மர்மநபர் ஒருவரின் உத்தேச ஓவியத்தை பஞ்சாப் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள், திமுகவுக்கு சென்றதாகக் கூறப்படுவது குறித்து முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அதிமுக வாக்குகள், திமுகவுக்கு சென்றதாகக் கூறப்படுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றார். அடிப்படையற்ற தகவலை சிலர் பரப்புவதாக விமர்சித்த அவர், 2026 தேர்தலில் திமுக வாக்குவங்கி, அதிமுக வசமாகும் என்றார்.
இளநீர், ஜூஸ், குளிர்பானங்களை ஸ்ட்ரா மூலம் குடிப்பதால், இரைப்பை பிரச்னை அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்ட்ரா பயன்படுத்தும்போது, அதிகப்படியான காற்று வயிற்றில் உறிஞ்சப்படுவதாகவும், இதன் விளைவாக இரைப்பை பிரச்னை உள்ளவர்களுக்கு மேலும் அது தீவிரமடையும் என்கிறார்கள். பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட ஸ்ட்ரா, சரும நோய்கள், வாய் புற்றுநோயை உண்டாக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.