news

News July 26, 2024

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த 5ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்தது. இந்த வழக்கில், திமுக, அதிமுக, பாஜக முன்னாள் நிர்வாகிகள் என இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ரவுடி ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமான பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

News July 26, 2024

AC போட்டபடி தூங்கலாமா..?

image

உலகம் முழுவதும் வெப்ப அலை அதிகரிக்கும் சூழலில், AC பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், AC போட்டு தூங்குவதால் ஏராளமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். *காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, கண்களில் வறட்சி, அரிப்பை உண்டாக்கலாம். *வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கக் கூடும். *தோல் வறண்டு போக வாய்ப்புள்ளது. *தலைவலி, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்னைகளுக்கு வித்திடலாம்.

News July 26, 2024

PAK vs SL: அரையிறுதியில் வெல்லப்போவது யார்?

image

மகளிர் ஆசிய கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற SL அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, PAK அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் பாக். அணி விக்கெட் ஏதும் இன்றி 45 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 23 பந்துகளுக்கு 20 ரன்களும், கல் ஃபெரோசா 16 பந்துகளுக்கு 22 ரன்களும் எடுத்துள்ளனர்.

News July 26, 2024

போக்குவரத்துத் துறை தனியார்மயமாகாது: சிவசங்கர்

image

அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆகாது என, அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 7,200 பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 1000 பேருந்துகளை வாங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், விடுபட்ட வழித்தடங்களில் விரைவில் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றார். மேலும், போக்குவரத்துத் துறை தனியார்மயம் என்பது வதந்தி எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

News July 26, 2024

திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியல் வெளியீடு

image

திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை NTA வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் என பல குளறுபடிகள் ஏற்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்ற ஆணையை தொடர்ந்து கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர்.

News July 26, 2024

மட்டன் சாப்பிடாமல் ஷமியால் இருக்க முடியாதா?

image

வேகப்பந்து வீச்சாளர் ஷமியால் தினமும் மட்டன் சாப்பிடாமல் இருக்க முடியாது என அவரது நண்பர் உமேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஒரு நாள் மட்டன் சாப்பிடவில்லை என்றால், அடுத்தடுத்த நாள்களில் தன் கட்டுப்பாட்டை இழப்பார் எனவும், தினமும் 1 கிலோ சாப்பிடாவிட்டால், அவரது பந்து வீச்சின் வேகம் 15 kmph ஆக குறைந்துவிடும் என்றும் உமேஷ் கூறியுள்ளார். காயம் காரணமாக ஷமி கடந்த 8 மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடவில்லை.

News July 26, 2024

அரசு பழங்குடியினர் பள்ளி பெயரை மாற்ற யோசனை

image

அரசு கல்வி நிறுவனங்களில் பழங்குடியினர் பள்ளி, கல்லூரி என்ற வார்த்தைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. 21ஆம் நூற்றாண்டிலும் அரசு பழங்குடியினர் நலப் பள்ளிகள் என்று அழைக்கப்படுவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சமூகநீதி பற்றி பேசிவரும் சூழலில், அரசுப் பள்ளி என்று மட்டும் ஏன் அழைக்கக் கூடாது என யோசனை கூறியுள்ளனர்.

News July 26, 2024

ATM கார்டு மூலம் ₹1 கோடி வரை இலவச காப்பீடு

image

ATM கார்டு பயனாளர்களுக்கு சில வங்கிகள் ₹1 கோடி வரை இலவச ஆயுள் காப்பீடு வழங்குவது உங்களுக்கு தெரியுமா? ஆமாம், HDFC, ICICI, SBI உள்ளிட்ட முன்னணி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ₹50,000 முதல் ₹1 கோடி வரை இலவச காப்பீடு வழங்குகின்றன. வாடிக்கையாளர் விபத்து உள்ளிட்ட எதிர்பாராத காரணங்களால் உயிரிழக்கும் போது, காப்பீடு தொகையை அவரது குடும்பத்தினர் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் வங்கியை அணுகவும்.

News July 26, 2024

பருப்பு வகைகளை அரசு கொள்முதல் செய்யும்

image

விவசாயிகளிடம் அனைத்து துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்யும் என, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், இ சம்ரிதி தளத்தில், விவசாயிகள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், காங்., ஆட்சியுடன் ஒப்பிடும்போது, விவசாயிகளிடம் தாங்கள் அதிக பொருட்களை கொள்முதல் செய்வதாகக் கூறினார்.

News July 26, 2024

பணிய வேண்டி இருக்கும்: மதுரை எம்பி

image

நீட் விலக்கு குறித்து தமிழகம் நிறைவேற்றிய தீர்மானம் அரசின் கவனத்திற்கு வந்ததா என மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கான பரிசீலனை அரசு மட்டத்தில் இல்லை என இணை அமைச்சர் பதிலளித்ததாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் குரல் இன்று பல மாநிலங்களில் ஒலிப்பதாகவும், மக்களின் கருத்து வலுவடையும் போது அரசு பணிய வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!