news

News July 26, 2024

IPL: பஞ்சாப் அணிக்கு புதிய பயிற்சியாளர்?

image

பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக, முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரெவர் பேலிஸின் பதவிக்காலம் முடிந்ததால், புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஜாஃபர் 2019-2021 காலகட்டத்தில் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். வருகிற 31ஆம் தேதி 2025 IPL சீசனுக்கான மெகா ஏலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

News July 26, 2024

விஷால் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு

image

தென்னிந்திய தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது முறைகேடாக ₹12 கோடி செலவழித்ததாக எழுந்த புகாரில், இனி நடிகர் விஷாலை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என அச்சங்கம் அறிவுறுத்தியுள்ளது. செலவழித்த பணத்தை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் பதில் அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News July 26, 2024

பாமக நிர்வாகி கருணாநிதி கட்சியிலிருந்து நீக்கம்

image

பாமக நிர்வாகியும், வன்னியர் சங்க மாநில செயலருமான N.M.கருணாநிதி, பாமகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வன்னியர் சங்கம், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததால், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கருணாநிதி நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, சி.வி.சண்முகத்திடம் 2,208 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

News July 26, 2024

‘தக் லைஃப்’ டப்பிங்கை தொடங்கிய சிம்பு

image

கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அந்த வகையில், சிம்பு தனது டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக, புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

News July 26, 2024

இலங்கை அணிக்கு 141 ரன்கள் இலக்கு

image

ஆசியக் கோப்பை மகளிர் T20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான். டாஸ் வென்ற SL, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய PAK வீராங்கனைகள் நிதானமாக விளையாடினர். குறிப்பாக முனீப் 37, ஃபெரோஜா 25, நிதா தர், ஃபாத்திமா தலா 23 ரன்கள் எடுத்தனர். SL தரப்பில், உதேஷிகா, கவிஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

News July 26, 2024

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அசத்தல்

image

திருத்தப்பட்ட <<13713914>>நீட்<<>> தரவரிசைப் பட்டியலில் 17 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். ரஜினிஷ் 720க்கு 720 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடமும், சையத் ஆரிபின் யூசுப் 715 மதிப்பெண்களுடன் 26ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். நீட் தேர்வு எழுதிய 1,52,920 தமிழக மாணவர்களில் 89,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News July 26, 2024

17,727 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். SSC சார்பில் நடத்தப்படும் CGL-2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். முதல்நிலை கணினி வழி தேர்வு: செப்டம்பர், அக்டோபரிலும், 2ஆம் நிலை கணினி வழி தேர்வு: டிசம்பரிலும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு https://ssc.gov.in இணையதளத்தை அணுகவும்.

News July 26, 2024

11 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News July 26, 2024

2 மாதங்களில் படப்பிடிப்பை முடித்த படக்குழு

image

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கும் படத்தில் ரியோ ராஜ் நடித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் கொண்டாட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்னைகளை மையமாகக் கொண்டு கதை பிண்ணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 26, 2024

மாதம் ₹9,250 வருமானம் தரும் அஞ்சலக திட்டம்

image

அஞ்சலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் மொத்த டெபாசிட் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும். இந்த திட்டத்தில், தனிநபர் கணக்கில் ₹9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ₹15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். இதில் 7.4% வட்டி கிடைப்பதால், உங்கள் குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து ₹15 லட்சம் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ₹9,250 வட்டியாக பெறலாம்.

error: Content is protected !!