India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலை.,யில் கடந்த 5 ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணிகளை செய்பவர்களின் விவரங்களை ஆக.31க்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கிறதா என்பதை சரிபார்க்கவே தகவல்கள் கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நாளை முதல் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
➤ மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறியது
➤ வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது – சென்னை வானிலை ஆய்வு மையம்
➤ தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது – ஐகோர்ட்
➤ தமிழகம், ராஜஸ்தான், திரிபுரா, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மேலிட பொறுப்பாளர்களை நியமனம்
பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக நடத்த உள்ள போராட்டம் வேடிக்கையானது என தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், அதன்மூலம் தமிழகமும் பயன்பெறும் என்றார். மேலும், தெற்கு ரயில்வேக்கு கடந்த 10 ஆண்டுகளில் ₹28,400 கோடிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் புதிய கண்டக்டர், ஓட்டுநர்கள் நியமிக்கப்படவில்லை என்றார். கடும் நிதிச்சுமையில் இருந்த போக்குவரத்து கழகம், திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்றுவருவதாக தெரிவித்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து 15 நாள் பயணமாக அவர் அமெரிக்கா செல்கிறார். அங்கு பல மாநிலத்திற்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். முதல்வருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் தனி செயலர்கள் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று காலை 10 மணிக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், மாற்றாந்தாய் போக்குடன் தமிழகத்தை பாஜக வஞ்சித்துவிட்டதாகவும், வெள்ள பேரிடர் நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதியை வழங்கவில்லை எனவும், தமிழக முதல்வரின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
▶ஜூலை – 27 | ▶ஆடி – 11 ▶கிழமை: சனி ▶திதி: சப்தமி ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶சந்திராஷ்டமம்: பூரம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 84,045 வழக்குகளும், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 60.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக உ.பி.,யில் 1.18 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
காலையில் அதிக அளவில் வெள்ளை பிரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு உடல் எடையையும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிப்பு மற்றும் பிற நோய்களுக்கும் வழி வகுக்கும் என்றும், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடுவது வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் கூறுகின்றனர். இதேபோல் நூடுல்ஸை காலையில் தவிர்க்க வலியுறுத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.