India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் ஜான் விஜய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து சில பெண்கள் தன்னிடம் பகிர்ந்திருப்பதாக பாடகி சின்மயி கூறியுள்ளார். இதுகுறித்து பெண்கள் சிலர் அனுப்பிய செய்திகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் பெண் செய்தியாளர் ஒருவரும், தன்னிடம் நடிகர் ஜான் விஜய் தவறாக நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து, “தி நியூஸ் மினிட்” ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சூசுகியின் 2019-20ஆம் ஆண்டு கணக்கை வருமான வரித்துறை ஆய்வு செய்தது. அப்போது வரி நிலுவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வரி நிலுவையை வட்டியுடன் சேர்த்து ₹779 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து முறையிட மாருதி சூசுகி திட்டமிட்டுள்ளது.
முகமது அசாருதீன் போன்ற மற்ற இந்திய வீரர்களை காட்டிலும் சச்சினைப் பார்த்துதான் மொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் பயந்தது என முன்னாள் வீரர் பாசித் அலி கூறினார். சச்சின் நன்றாக விளையாடும் போட்டிகளில் இந்தியா எளிதாக வெல்வது வழக்கமாகும் எனக் கூறிய அவர், குறுகிய காலத்திலேயே கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த சச்சின் உலகின் டாப் பவுலர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டதாக புகழாரம் சூட்டினார்.
பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு முன்னுரிமை அளித்து, மற்ற மாநிலங்களை பாஜக அரசு புறக்கணித்துள்ளதாக எழுந்த விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா பதிலளித்துள்ளார். கடந்த காலத்தைப் போலவே அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்துள்ளதாகக் கூறிய அவர், மாநில மறுசீரமைப்பு சட்டம் 2014-இன்படி, ஆந்திராவின் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவ வேண்டியது கட்டாயமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை நீக்கப்பட்டாலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேராது என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இல்லாதபட்சத்தில் அதிமுக கூட்டணி சேருமா என கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், பாஜக தலைமையின் ஆசி இல்லாமல் அதிமுகவை அண்ணாமலை விமர்சித்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால் பாஜகவுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி சேராது என்றார்.
ITR தாக்கல் செய்தவர்கள் வங்கி ஏடிஎம் வாயிலாக E-Verify செய்யலாம். வங்கி ஏடிஎம்மிற்கு சென்று கார்டை ஸ்வைப் செய்து, PIN-ஐ உள்ளிடவும். அடுத்து, வருமான வரி தாக்கல் செய்ய EVC உருவாக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். e-Filing போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட செல்ஃபோனுக்கு EVC அனுப்பப்படும். பின்னர் அதைக் கொண்டு ‘என்னிடம் EVC உள்ளது’ என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வருமானத்தை E-Verify செய்ய முடியும்.
கடந்த 23ஆம் தேதி தாக்கலான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்கவரி 6%ஆக குறைக்கப்பட்டது. இதையடுத்து, தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் அதன் விலை ₹3,280 குறைந்துள்ளது. 22ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹54,600க்கு விற்பனையான நிலையில், 4 நாள்களாக தொடர்ந்து சரிந்து நேற்று ₹51,320க்கு விற்பனையானது. கிராம் தங்கம் ₹6,825லிருந்து ₹410 சரிந்து ₹6,415க்கு விற்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 282 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பிராத்வெய்ட் 61, ஹோல்டர் 59 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி வெ.இண்டீசின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல்நாள் முடிவில் இங்கிலாந்து 38/3 ரன்கள் எடுத்து 244 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
வாய்ஸ் கால், டேட்டா மற்றும் SMS ஆகியவற்றுக்கு தனித்தனி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த TRAI உத்தேசித்துள்ளது. வரும் 16ம் தேதிக்குள் நுகர்வோர் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுள்ளது. தற்போது, இவை அன்லிமிடட் பிளான் என தொகுக்கப்பட்ட திட்டமாக வழங்கப்படுகிறது. இதனால் வாய்ஸ் கால், SMS மட்டுமே பயன்படுத்துவோர், டேட்டா பயன்படுத்தாவிட்டாலும் அதற்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளதாக புகார் கூறுகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளில் துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மிண்டன் & ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. மதியம் 12.30 மணிக்கு பாய்மரப் படகு & துப்பாக்கி சுடும் போட்டிகளுடன் இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கவுள்ளது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் & ஏர் பிஸ்டல் ஆகிய இரு பிரிவுகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. <<-se>>#Olympics2024<<>>
Sorry, no posts matched your criteria.