news

News July 27, 2024

வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கிறீர்களா?

image

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க விரும்புவோர், எந்த வண்ணத்தை தேர்வு செய்வது என குழம்புவர். அவர்களுக்கான டிப்ஸ்தான் இது. இதற்கென பிரத்யேகமாக சில செயலிகள் உள்ளன. பெயிண்ட் அடிக்க விரும்பும் அறைகளை புகைப்படம் எடுத்து, அந்த செயலியில் பதிவேற்றி, அதிலுள்ள வண்ணத்தை பூசலாம். இதுபோன்று செய்து, குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்த வண்ணத்தை தேர்வு செய்து வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கலாம்.

News July 27, 2024

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

image

இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த 4 நாள்களாக சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ஒரு சவரன் ₹51,720க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ஒரு கிராம் ₹6,465க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹89க்கும், ஒரு கிலோ ₹89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News July 27, 2024

இந்தியாவில் 5 ஆண்டுகளில் 628 புலிகள் சாவு

image

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார். அரசின் புள்ளிவிவரப்படி, இயற்கை பேரிடர், நோய் தாக்குதல், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் 2019 – 96, 2020 – 106, 2021 – 127, 2022 – 121, 2023 – 178 புலிகள் இறந்துள்ளன. 2012ஆம் ஆண்டுக்கு பிறகு 2023ஆம் ஆண்டில்தான் மிக அதிக எண்ணிக்கையில் புலிகள் உயிரிழந்துள்ளன.

News July 27, 2024

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஆய்வு

image

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பெங்களூருவில் சர்வதேச விமான நிலையம் இருப்பதால், ஓசூருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா? என்ற சந்தேகம் நிலவியது.

News July 27, 2024

BSNL 4ஜி 2025க்கு தள்ளிப் போக வாய்ப்பு: அரசு

image

BSNL 4ஜி தொடங்குவது 2025 ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்யும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 4ஜியை தொடங்காமல் உள்ளது. இந்தாண்டு 4ஜி சேவை தொடங்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இது தற்போது ஓராண்டு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News July 27, 2024

APPLY: சிஆர்பிஎப்பில் மருத்துவர்களுக்கு வேலை

image

சிஆர்பிஎப் சார்பில் ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 32 சிறப்பு மருத்துவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும், சம்பளம் மாதம் ₹75,000-₹85,000 என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <>https://rect.crpf.gov.in/<<>> இணையதளத்தை பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 27, 2024

27ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்?

image

27ஆம் தேதி பிறந்தவர்கள் குறித்து நியூமராலஜியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து காணலாம். * சவால்களைத் துணிந்து எதிர்கொள்வர் * அதிகாரமிக்க காவல்துறை, ராணுவம் ஆகிய தொழில்களில் அதிக ஈர்ப்பு இருக்கும் * எந்த வேலையையும் உடனடியாக செய்து முடிக்கும் தன்மை கொண்டவர் *முன் கோபக்காரர்களாய் இருப்பர் *விடா முயற்சியினால் முன்னேறி விடுவர் * பொறியாளர், அறுவை சிகிச்சை நிபுணர்களாக இருப்பர்.

News July 27, 2024

தனிக்கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்? விளக்கம்

image

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காரணமே அதிமுக ஒருங்கிணையாதது தான் என ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சிலர் தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என விருப்பம் தெரிவிப்பதாகவும், ஆனால் அதுபோன்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அத்துடன், அதிமுகவை பதவிக்காக ஒருங்கிணைக்க விரும்பவில்லை என்றும், தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அதனை ஏற்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News July 27, 2024

Visa, Ola Fin நிறுவனங்களுக்கு RBI அபராதம்

image

Visa, Ola Fin மற்றும் மணப்புரம் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. கேஒய்சி விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டி, Visa நிறுவனத்துக்கு ₹2.4 கோடியை அபராதமாக செலுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதே காரணத்துக்காக Ola Fin நிறுவனத்துக்கு ₹87 லட்சம், மணப்புரம் நிதி நிறுவனத்துக்கு ₹41.5 லட்சம் அபராதம் செலுத்தும்படி ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.

News July 27, 2024

Olympics: சோதனையில் சிக்கிய முதல் வீரர்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஜூடோ போட்டியில் பங்கேற்க இருந்த ஈராக் வீரர் சஜத் சிஹெனிடம் சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை சார்பில் பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. இதில், Anabolic Steroids எனும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய முதல் வீரர் சஜத் ஆவார்.

error: Content is protected !!