news

News July 27, 2024

காதல் கணவரை காண பாரிஸ் செல்லும் டாப்ஸி

image

பாரிஸில் உள்ள தனது காதல் கணவரும் இந்திய பேட்மிண்டன் அணியின் சிறப்புப் பயிற்சியாளருமான மத்தியாஸ் போவை காண நடிகை டாப்ஸி பன்னு பிரான்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு. எப்படி மிஸ் செய்ய முடியும்?” என பதிவிட்டுள்ளார். அவர் இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா திரும்ப டிக்கெட் புக் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

News July 27, 2024

BREAKING: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

image

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமைச்செயலகத்தில் இருந்தவாறே,
காணொலிக்காட்சி மூலம், வேலூர், திருப்பூர், நாகை, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

News July 27, 2024

வெப் தொடரில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு

image

சினிமாவை விட வெப் தொடர்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக நடிகை வாணிபோஜன் வெளிப்படையாக கூறியுள்ளார். ராதாமோகன் இயக்கியுள்ள ‘சட்னி சாம்பார்’ தொடரில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்த அவர், “ஆங்கிலோ – இந்திய பெண்ணாக நடித்தது புதிய அனுபவத்தை தந்தது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள வெப் தொடர்களில் நடிப்பேன். வெப் தொடர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

போரை நிறுத்த சொன்ன கமலா ஹாரிஸ்

image

போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் நெதன்யாகுவிடம் கமலா பேசியபோது, காசா போரை முடிவுக்கு கொண்டுவர நேரம் வந்துவிட்டதாகவும், அமைதியை நிலைநாட்டி பாலஸ்தீன மக்களுக்கு தேவையான, நிலையான தீர்வளிக்க இஸ்ரேல் முன்வர வேண்டுமெனவும் உலக நாடுகள் சார்பில் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 27, 2024

நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

image

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 9ஆவது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. இதில், 2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, பட்ஜெட்டில் தங்கள் மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், டெல்லி, ஹிமாச்சல் ஆகிய 7 மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

News July 27, 2024

மத்திய அரசின் இலவச வீடு யாருக்கெல்லாம் கிடைக்கும்?1/2

image

வீடு இல்லாதவர்கள் (அ) வீடு கட்டுவோர் பயனடையும் வகையில், 2015ல் மோடி அரசு பிரதமரின் இலவச வீடு திட்டத்தை கொண்டு வந்தது. இதில் யாருக்கு வீடு கிடைக்கும்? இதற்கு என்ன தகுதி வேண்டும்? என்பதை காணலாம். *வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு இல்லாதவர்கள், வீடு கட்ட இயலாதவர்கள் விண்ணப்பிக்கலாம். *2 அறைகள் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

News July 27, 2024

மத்திய அரசின் இலவச வீடு யாருக்கெல்லாம் கிடைக்கும்?2/2

image

*ஆண்டு வருமானம் ₹3 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை இருக்க வேண்டும். * மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். https://pmaymis.gov.in என்ற இணையத்தில் நீங்களே விண்ணப்பிக்கலாம். *வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் இந்த ஆவணங்களுடன் அருகே உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். *ஆதார் எண், புகைப்படம், வங்கி பாஸ் புத்தகம், தொலைபேசி எண் ஆகிய ஆவணங்கள் கட்டாயத் தேவையாகும்.

News July 27, 2024

பெட்ரோல் GST வரி முறைக்குள் கொண்டுவரப்படும்?

image

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை GST வரியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநில அரசுகள் இதற்கு ஒப்புக்கொண்டால், VAT வரிக்கு பதிலாக GST பதிலாக விதிக்கப்படுமெனக் கூறிய அவர், விரிவான விவாதத்திற்குப் பிறகு வரி விகிதத்தை நிர்ணயிக்க முடியும் என்றார். GST வரி விதிப்பின் கீழ் எரிபொருட்கள் கொண்டுவரப்பட்டால், அவற்றின் விலை ₹18 வரை குறைய வாய்ப்புள்ளது.

News July 27, 2024

ஜூலை 31க்கு பிறகு ₹5,000 அபராதம்

image

நிதியாண்டிற்கான ITR கணக்கை 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும், அதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு ITR தாக்கல் செய்தால் ₹5,000, ₹5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ₹1000 அபராதம் செலுத்த வேண்டும்.

News July 27, 2024

உக்ரைனில் அடுத்த மாதம் மோடி சுற்றுப்பயணம்?

image

உக்ரைன் மீது 2022ஆம் ஆண்டு ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 2 ஆண்டாக நீடிக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இத்தாலி ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை மோடி சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் வரும்படி மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதையேற்று உக்ரைனுக்கு அடுத்த மாதம் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!