India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காவலர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்த பெரம்பூரை சேர்ந்த பிரதீப், நோட்டமிட்டு கொலைக் கும்பலை அப்பகுதிக்குள் வரச் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், சென்னை ஆயுதப்படை பிரிவு உதவி ஆய்வாளரின் மகன் ஆவார். இக்கொலையில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவரும்
காசாவில் இனப்படுகொலை நடத்திவரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு காட்டுமிராண்டி என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள முடியாது. வெறுப்பு & வன்முறையில் நம்பிக்கையில்லாத உலக அரசுகளுக்கும், இஸ்ரேலிய குடிமக்களுக்கும் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமாக சிலியில் 1960 மே 22ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமே கூறப்படுகிறது. சிலியின் தெற்கு பகுதியில் உள்ள வால்டிவியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 9.5ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலை தாக்கியுள்ளது. இந்த 2 இயற்கை சீற்றங்களுக்கு சிலியில் 5,700 பேர் பலியானதாகவும், 20 லட்சம் பேர் வீடுகளை இழந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
சர்ச்சை சாமியார் நித்தியானந்தா பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது. அதில், ஜூலை 21இல் கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக கூறியிருந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி அறிவிப்பு வரவில்லை. இதனால் நித்தியானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் ஆசிரமம் பெயரில் இருக்கும் பல கோடி சொத்துகளுக்காக யாரோ சிலர் வீடியோவை வெளியிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
உடனடி தேவைக்காக வங்கிகள் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை “பெர்சனல் லோன்” எனப்படும் தனிநபர் கடன் வழங்குகின்றன. அந்தக் கடனை 5 வங்கிகள் குறைந்த வட்டியுடன் தருகின்றன. அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
1) HDFC Bank: 10.75%- 24%
2) ICICI Bank: 10.65%- 16%
3) SBI Bank: 11.15%- 15.50%
4) Kotak Mahindra: 10.99%- 16.99%
5) PNB: 12.75%- 16.25%
ஒலிம்பிக் போட்டிகளால் விழாக்கோலம் பூண்டுள்ள பாரிஸ் நகரத்தில் சாலையோரம் வசித்த மக்களை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். சாலையோரம் வசித்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களாவர். ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை அம்மக்களை முகாம்களில் தங்க வைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன.
காலநிலை மாற்றம் உலகளவில் மழைப்பொழிவை சீர்குலைத்து, சூறாவளியை ஏற்படுத்துவதாக சீன அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது. அதன் ஆய்வில், உலகின் 75% நிலப் பகுதிகளில் மழைப்பொழிவில் மாறுபாடு அதிகரித்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வளிமண்டல ஈரப்பதத்தின் இயல்பை சீர்குலைத்து, மழைக் காலங்களில் அடிக்கடி அதிதீவிர சூறாவளிகள் (Typhoon) உருவாக வெப்பமயமாதல் வழிவகுப்பதாகத் தெரியவந்துள்ளது.
புதிய வகை ஸ்மார்ட் ஃபோன்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக ‘நோக்கியா’ தயாரிப்பாளரான HMD நிறுவனத்தின் சி.இ.ஓ ஜீன் பிராங்கோயிஸ் அறிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரெஸ்ட் & கிரெஸ்ட் மேக்ஸ் ரக போன்கள் வெளிநாட்டு சந்தையில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் ஃபோன்கள், உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் பல படங்கள், அதிரடி காட்சிகளுடன் வந்திருந்தாலும், சில படங்கள் நம்மை மூச்சு விடக்கூட அனுமதிக்காமல் அப்படியே கட்டிப் போட்டு விடும். அவை என்னென்ன? * Matrix 1-4 * Salt *London Has Fallen * Olympus Has Fallen * Angel Has Fallen *John Wick 1-4 * Extraction 1-2 *Mission Impossible 1-7 *X Men *Mad Max Fury Road * Transporter 1-3 *Expendables 1-3 *Rocky 1- 6 *Rambo 1-5 * Speed .
நீலகிரி தொகுதி முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மதனின் மறைவு வேதனையளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். தன் சமூக சேவைகள் மூலமும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைத்ததற்காகவும் என்றும் நினைவுக்கூறப்படுவார் என குறிப்பிட்ட பிரதமர், மதனின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆறுதலும் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த நிர்வாகிகள் மதனின் ஊடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.