news

News July 27, 2024

இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சித்த பாஜக: தயாநிதி

image

இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாஜக வஞ்சனை செய்வதாக திமுக எம்.பி., தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “தமிழர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால் மத்திய அரசின் பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழகத்துக்கு நிதியும் இல்லை. தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்த பாஜகவுக்கு தமிழர்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

ALERT: இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்

image

நீலகிரி, கோவையில் ஓரிரு பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தொடர்ந்து 5 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

News July 27, 2024

JOBS: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில், டெக்னிகல் அட்டென்டன்ஸ், ஜூனியர் என்ஜீனியர் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட 476 காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதியாக, ஐடிஐ, என்ஜீனியரிங் டிப்ளமோ குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் <>https://iocl.com/latest-job-opening<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 21 கடைசி நாள் ஆகும்.

News July 27, 2024

வடக்கா? தெற்கா? பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு…

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவின் சிறப்பு அம்சமாக கருதப்படும் கம்பீர அணிவகுப்பில் தென் கொரியாவை வட கொரியா என்று IOC தவறாக அறிமுகப்படுத்தியது. இது விளையாட்டு தளத்தைக் கடந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசம் கொண்ட தென் கொரிய விளையாட்டு அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, நடந்த தவறுக்கு IOC-ன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் மன்னிப்புக் கேட்டு சூழலை சரி செய்துள்ளது.

News July 27, 2024

விஜய் மல்லையாவுக்கு SEBI தடை விதித்தது

image

இந்திய பங்குச் சந்தையில் மூன்று ஆண்டுகளுக்கு வர்த்தகம் செய்ய விஜய் மல்லையாவுக்கு SEBI தடை விதித்துள்ளது. 2006-2008 காலக்கட்டத்தில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இருந்து பங்கு சந்தையில் (பங்கு & பத்திரங்கள்) சட்டவிரோதமாக அவர் முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. அதனை விசாரித்த SEBI, அவர் முறைகேடுகளை செய்ததை உறுதி செய்தது. வங்கிகளில் ₹9,000 கோடி மோசடி செய்த அவர் பிரிட்டனில் பதுங்கியிருக்கிறார்.

News July 27, 2024

BEAUTIFUL: பார்வையாளர்களை ஈர்த்த பாலிவுட் அழகிகள்

image

டெல்லியில் உள்ள தாஜ் பேலஸில் ‘இந்திய கவுச்சர் வீக்’ கொண்டாட்டத்தின் 2ஆம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு மாடலாக கலந்துகொண்ட பாலிவுட் அழகிகள் ஜாக்குலின், ரித்திமா கபூர் தங்களது வசீகரத்தால் பார்வையாளர்களை ஈர்த்தனர். புகழ்பெற்ற ரோஸ்ரூம் ஆடையகத்தின் வடிவமைப்பாளர்கள் சுனித் வர்மா & இஷா ஜஜோடியா ஆகியோர் ‘காடு’ எனும் கருப்பொருளில் தங்கள் ஆடை & அணிகலன்களை காட்சிப்படுத்தினர்.

News July 27, 2024

ITR தாக்கல்: வலைதளங்களில் கொந்தளிக்கும் மக்கள்

image

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வரும் 31 ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை
சுமார் 5 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். எனினும், தாக்கலின்போது, வருமான வரி இணைய தளத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாக, சமூக வலைதளங்களில் சிலர் புகார் தெரிவிக்கின்றனர். இத்தகைய பிரச்னைகள் அவ்வப்போது தீர்க்கப்பட்டு, இணையதளம் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்படும் என, வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.

News July 27, 2024

ஐஏஎஸ் அதிகாரியாவது எப்படி? (1/3)

image

இந்திய அரசுத் துறையில் அதிகாரம் மிக்கப் பதவிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே அமர்த்தப்படுவர். அந்த பதவிக்கு எப்படி தேர்வு நடைபெறுகிறது, என்னென்ன தேர்வு நடத்தப்படுகிறது? என்பது குறித்து இங்கு காணலாம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். அந்தத் தேர்வு, 2 கட்டங்களைக் கொண்டது. முதல்கட்டத்தில், ஆரம்ப நிலை எனப்படும் முதல் நிலைத் தேர்வு நடத்தப்படும்.

News July 27, 2024

ஐஏஎஸ் அதிகாரியாவது எப்படி? (2/3)

image

முதல்நிலை தேர்வில் 2 தாள்கள் உண்டு. அதில் 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர், 2ஆவது கட்ட மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 2 விதமாக நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் 9 தாள்கள் உண்டு. அதாவது, 4 தாள்கள் பொது அறிவுத் தாள்கள், 2 விருப்பப் பாடத் தாள்கள், 1 கட்டுரைத் தாள், 2 மொழித் தாள்கள் ஆகும்.

News July 27, 2024

ஐஏஎஸ் அதிகாரியாவது எப்படி? (3/3)

image

சிவில் சர்வீஸ் தேர்வை 21 வயது நிரம்பியோர் எழுதலாம். கல்வித் தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெற புத்தக அறிவு மட்டும் போதாது. பொது அறிவு, அலசி ஆராயும் திறன், விவாதிக்கும் திறன் வேண்டும். தேர்வு மதிப்பெண்படி தயாரிக்கப்படும் ரேங்க் அடிப்படையில் விருப்பப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளில் ஏதேனும் ஒன்று ஒதுக்கப்படும்.

error: Content is protected !!