news

News July 27, 2024

OLYMPICS: துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இருந்து, இந்திய கலப்பு இரட்டையர் அணி வெளியேறியது. 10 மீ., ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச் சுற்றில் ரமிதா ஜிண்டால் – அர்ஜூன் பபுதா ஜோடி 6ஆவது இடத்தை பிடித்தது. மற்றொரு தகுதிச் சுற்றில், இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் ஜோடி 12ஆவது இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் மூலம் இரு அணிகளும் பதக்கச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. <<-se>>#OLYMPICS2024<<>>

News July 27, 2024

வருமான வரி பிடித்தமா? இதை செய்து திரும்பி பெறலாம்

image

ஒவ்வொரு மாத ஊதியத்திலும் சிலருக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படும். இது, ஆண்டு வருமானத்தை கணக்கிட்டு, அதற்கான வரி வகுக்கப்பட்டு பிடித்தம் செய்யப்படும். இதில் பழைய விகிதத்தில் அரசு நிர்ணயித்த வருமானத்துக்கு கூடுதலான வருமானத்துக்கு வசூலிக்கப்படும் தொகைக்கு ரூ.2 லட்சம் வரை மருத்துவம், வாடகை, காப்பீடு உள்ளிட்ட செலவு கணக்குகளை தாக்கல் செய்து பிடித்தத்தை திரும்ப பெற முடியும்.

News July 27, 2024

2024 ஒலிம்பிக்ஸ்: முதல் பதக்கத்தை வென்ற கஜகஸ்தான்

image

33ஆவது ஒலிம்பிக்ஸ், பாரிஸில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில், 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில், கஜகஸ்தான் அணி வெண்கலம் வென்றுள்ளது. இதன்மூலம், 2024 ஒலிம்பிக்கில், முதல் பதக்கத்தை வென்ற நாடு என்ற பெருமையை அது பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் நூற்றுக்கணக்கான போட்டிகளில் பங்கேற்க ஆயிரக்கணக்கான வீரர்கள் தயாராக உள்ள நிலையில், அதனை பார்வையிட லட்சக்கணக்கான ரசிகர்கள் பாரிஸில் குவிந்துள்ளனர்.

News July 27, 2024

தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளதா: TKS இளங்கோவன்

image

மத்திய அரசின் 2024-25 பட்ஜெட், தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா? இல்லையா என்ற ஐயப்பாட்டை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளதாக, திமுக செய்தி தொடர்பாளர் TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். கடலூரில் பேசிய அவர், வளர்ச்சி பெற்ற மாநிலங்களில், தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக கூறினார். ₹12,000 கோடி அளவிற்கு மத்திய அரசுக்கு வரி கொடுத்தும், தமிழ்நாட்டிற்கு பிரதிபலனாக கிடைக்கும் பணம் குறைவுதான் என்றும் சாடினார்.

News July 27, 2024

‘C’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

image

‘C’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தாமல் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கனிவான மனம் கொண்டவர்களாக இருக்கும் அதே நேரத்தில் அதீத மன விரக்தியிலும் இருப்பார்கள் என்று தெரிவிக்கின்றனர். குருவின் ஆதிக்கம் கொண்ட ‘C’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இதை பகிருங்கள்.

News July 27, 2024

அரிசி விலை மேலும் உயரும் அபாயம் 1/2

image

25 கிலோ எடைக்கும் கூடுதலாக உள்ள அரிசி மூட்டைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், சில்லறை விலையில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு தற்போது 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெறும் வகையில் அரிசி விற்பனையாளர்கள் தற்போது 26 கிலோ எடை மூட்டையில் அவற்றை விற்பனை செய்கின்றனர்.

News July 27, 2024

24 மணி நேரத்தில் ரத்து செய்வோம்: அகிலேஷ்

image

INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “குறுகிய கால ராணுவ ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டத்தை, 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம். மீண்டும் பழைய முறையில் ஆள்சேர்ப்பு நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.

News July 27, 2024

அரிசி விலை மேலும் உயரும் அபாயம் 2/2

image

இந்நிலையில், 25 கிலோவுக்கு மேல் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதால் அவை விவசாய பண்ணை விளைபொருள் அல்ல என்று GST கவுன்சில் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது. இதனை மத்திய மறைமுக வரிகள் வாரியம் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உத்தரவு வரும் என்றால், 26 கிலோவுக்கு மேல் பைகளில் விற்கப்படும் பொருள்களுக்கு 5% GST விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

News July 27, 2024

சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி? (1/2)

image

தமிழக அரசு அளிக்கும் சாதி சான்றிதழ், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பயன்கள் பெற உதவுகிறது. இதை ஆன்லைனில் எளிதில் விண்ணப்பித்து பெறலாம். பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர், <>https://www.tnesevai.tn.gov.in/ <<>>என்ற இணையதளம் சென்று, பயனாளர் நுழைவு என்ற இடத்தை அழுத்தினால் திறக்கும் பக்கத்தில் விவரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

News July 27, 2024

சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/2)

image

பிறகு, இணையதளத்தில் பிரத்யேக LOG IN, கடவுச்சொல்லை உருவாக்கி உள்நுழைய வேண்டும். பின்னர் வருவாய்த்துறை சேவைக்கு சென்று, சாதி சான்றிதழ் பிரிவை தேர்ந்தெடுத்து, CAN எண்ணை விண்ணப்பித்து பெற்று, பெற்றோர் சாதி சான்றிதழ் எண்ணை குறிப்பிட வேண்டும். இதையடுத்து, விண்ணப்பதாரர் புகைப்படம், முகவரி சான்று, பெற்றோர் சாதி சான்றை பதிவேற்றி கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!