India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கைக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றால், இலங்கையின் ஸ்பின்னர்களை அவர் சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அணியில் ஹசரங்கா மற்றும் தீக்ஷனா இருவரும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். குறிப்பாக, ஹசரங்காவிற்கு எதிராக 11 பந்துகளை எதிர்கொண்டுள்ள சஞ்சு, 3 முறை ஆட்டமிழந்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் விருதுகளுக்கு, ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக பாடுபடும் தமிழறிஞர்கள், படைப்பாளர்களை பாராட்டி விருது வழங்கப்படுகிறது. 2024க்கான தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர், நற்றமிழ் பாவலர், தூயதமிழ் பற்றாளர், தமிழ் ஊடக விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க <
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளம் முடங்கியதால், <<13718810>>ITR <<>>-ஐ தாக்கல் செய்ய முடியாமல், பலரும் புலம்பி வருகின்றனர். ஜூலை 31க்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும். இதை தவிர்க்க பலர் ITR தாக்கல் செய்து வரும் நிலையில், தற்போது இணையதளம் முடங்கியுள்ளது. இதனால், ITR தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
களத்திலும், களத்திற்கு வெளியேயும் ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டனாக இருந்ததாக இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். கேப்டனாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் அதே நேரத்தில், மிகப்பெரிய பொறுப்பு இருப்பதையும் உணர்வதாக கூறிய அவர், ரோஹித் ஷர்மாவிடமிருந்து ஆடுகளத்தில் விளையாட மட்டுமல்ல, பண்போடு அணுகவும் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
‘ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை கூற அமித் ஷாவுக்கு எந்த தார்மீக தகுதியும் இல்லை என என்சிபி (சரத்சந்திர பவார்) தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். குஜராத்தில் இருந்து நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட அமித் ஷா, அடுத்தவர்களை விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமித் ஷா போன்றவர்கள் நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்வதை அரசியில் ரீதியாக தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரித்துள்ளார்.
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இலங்கை வீரர்கள் தங்களது 100 சதவீத உழைப்பை தர வேண்டும் என அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியுள்ளார். எங்கள் அணியில் திறமையான வீரர்கள் பலர் இருந்தாலும், அந்த திறமையை வெற்றியாக மாற்றி போட்டியை வெல்வதே முக்கியம் என்று தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
திமுகவை பற்றி பேசியதற்காக கட்சியில் இருந்து தன்னை நீக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுவது ஆச்சரியமாக இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ் தலைவரை மேடையில் வைத்துக்கொண்டு தான் தெரிவித்த கருத்துக்காக, ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை விமர்சிப்பது தேவையில்லாதது என்றும் கூறியுள்ளார். முன்னதாக, திமுகவிடம் அடிமையாக இருக்கக்கூடாது என கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.
33ஆவது ஒலிம்பிக்ஸில் சீனா அணி முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவு இறுதிப் போட்டியில், தென்கொரியாவை சீனா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரிய வீரர்கள் வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதன்மூலம், 2024 ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. <<-se>>#OLYMPICS2024<<>>
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தாவை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஜனநாயகத்தின் அங்கம் என்பதை புரிந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திய அவர், இதுதான் மாநில முதல்வரை நடத்தும் விதமா? என்றும் கேள்வி எழுப்பினார். சந்திரபாபு நாயுடுவை 20 நிமிடம் பேசவிட்டு, தனக்கு 5 நிமிடமே தரப்பட்டதாக மம்தா குற்றஞ்சாட்டியதை மேற்கோள் காட்டி அவர் கண்டித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.