India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கணினி காலத்தில் கடவுச்சொல், முக்கிய தகவல்களை ஸ்மார்ட் போன்களில் சேமித்து வைக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. அந்த ஸ்மார்ட்போனை யாரேனும் திருடி விட்டால் முக்கியத் தகவல் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, திருடுபோன ஸ்மார்ட்போனை எளிதில் முடக்க வசதியுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறையின் 14422 எண்ணைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தால் உடனே முடக்கப்பட்டு விடும்.
பெங்களூருவில் ஆட்டுக் கறி என்ற பெயரில், நாய் கறி விற்கப்பட்டதாக புகார் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அசைவ உணவு ஓட்டல்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், ஜெய்ப்பூரிலிருந்து கடத்தப்படும் நாய் கறி பெங்களூருவில் விற்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கறி மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக முதல் டி20 போட்டிக்கான தனது ஆடும் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ள அவர், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார். அணி விவரம்: ஜெய்ஸ்வால், பண்ட், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ்.
நாட்டு சோளம் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். விதைக்கும் போது கிலோ ₹100 வரை கொள்முதல் செய்யப்பட்ட நாட்டு சோளம் தற்போது, ₹36ஆக சரிந்துள்ளது. தென்காசி மாவட்ட பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் வரை நாட்டு சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலையில், உரிய விலை இல்லாததால் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில், இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோரமங்களா அருகே உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த கிருதிகுமாரி, 3 நாள்களுக்கு முன் கொல்லப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ வைரலான நிலையில், தப்பியோடிய அபிஷேக், மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேல் விசாரணைக்காக அவர் பெங்களூரு அழைத்து வரப்படுவதாக போலீசார் கூறியுள்ளனர்.
மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 6 சுற்றுகளின் முடிவில் 580 புள்ளிகளுடன் மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் நபராக அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை அவர் பெற்று தருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. <<-se>>#OLYMPICS2024<<>>
மின்சார வாகனங்களுக்கான மானியம் பெறுவதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதியுடன் மானியம் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், மத்திய கனரக தொழில்துறை கூடுதலாக ₹278 கோடி ஒதுக்கீடு செய்து, கால அவகாசத்தை செப்.30 வரை நீட்டித்துள்ளது. டூவிலருக்கு ₹10,000 வரை, சிறிய 3 சக்கர மின்சார வாகனத்திற்கு ₹25,000 வரை, பெரிய 3 சக்கர வாகனத்திற்கு ₹50,000 வரை மானியம் பெறலாம்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மைக் அணைக்கப்பட்டதாக மம்தா கூறியது முற்றிலும் தவறானது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கூடுதல் நேரம் எடுத்த அனைத்து மாநில முதல்வருக்கும் நினைவூட்டலுக்காக ஓலி எழுப்பப்பட்டதே தவிர, யாருடைய மைக்கும் அணக்கப்படவில்லை என்றார். உண்மைக்கு புறம்பான தகவலை மம்தா பானர்ஜி கூறியது துரதிர்ஷ்டவசமானது, அது உண்மையல்ல என்றும் கூறியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அறிமுக விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே 42 பை ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கி., அணியின் கீப்பர் லேஸ் ஆமெஸ் ஆஸி., எதிராக 1934இல் 37 பை ரன்களை விட்டுக் கொடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. 90 ஆண்டுகள் கழித்து அந்த சாதனையை ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே தற்போது முறியடித்து இருக்கிறார்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, குமரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என கணித்துள்ளது. இதனிடையே, கரூர், தேனி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.