news

News July 27, 2024

6 ஓவர்களில் 74 ரன்கள் குவித்த இந்திய அணி

image

இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணி 6 ஓவர்களில் 74 ரன்கள் குவித்துள்ளது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 40 (20), கில் 34 (16) ரன்களை குவித்து அவுட்டானர்கள். இதைத் தொடர்ந்து தற்போது, கேப்டன் SKY, பண்ட் ஆகியோர் களத்தில் உள்ளனர். IND அணி தற்போதுவரை 6.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் குவித்துள்ளது. IND அணி எத்தனை ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க

News July 27, 2024

அரசியலுக்காகவே மம்தா வெளிநடப்பு: பாஜக

image

மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு திட்டமிட்டு நடந்ததாக, பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா விமர்சித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு, கேமராக்களுக்காக திட்டமிடப்பட்ட சம்பவம் என்று சாடிய அவர், முக்கியமான கூட்டத்தில் மம்தா பானர்ஜி அரசியல் நாடகமாடுவது வருந்தத்தக்கது என்றார். வெளிநடப்பு மூலம் மேற்குவங்க மக்களை மம்தா அவமதித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News July 27, 2024

மாணவர்களுக்கான கற்றல் மதிப்பீடு வகுப்புகள் அறிவிப்பு

image

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் படிக்கும் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் மதிப்பீடு வகுப்புகள் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 9ஆம் வகுப்பு-ஆகஸ்ட் 19, 20, 10ஆம் வகுப்பு-ஆகஸ்ட் 20, 21, 11ஆம் வகுப்பு-ஆகஸ்ட் 21, 22, 12ஆம் வகுப்பு-ஆகஸ்ட் 22, 23ஆம் தேதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில, இந்த திட்டம் உதவுகிறது.

News July 27, 2024

எலிகளால் ரூ.5 லட்சம் அபராதம் கட்டிய ஒப்பந்ததாரர்

image

மும்பை ரயில் நிலைய வளாகத்திற்குள் 91 எலிகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, நிலைய பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு, மத்திய ரயில்வே ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் எலி தொல்லை குறித்து பயணிகள் புகார் அளித்து வந்த நிலையில், ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பொருட்கள் வைக்கும் அறைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில் இறந்த நிலையிலும், உயிருடனும் எலிகள் கண்டெடுக்கப்பட்டன.

News July 27, 2024

2026இல் ஆட்சி மாற்றம் உறுதி: நாராயணசாமி

image

புதுச்சேரியில் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நிகழும் என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் புதுச்சேரியில் INDIA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்ற அவர், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அங்கு, என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக
இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 27, 2024

TNPL : கடைசி பந்தில் கோவை த்ரில் வெற்றி

image

TNPL தொடரில் இன்று சேலம் அணிக்கு எதிரான போட்டியில் கோவை த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சேலம் 20 ஓவரில் 171 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய கோவை, அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் சித்தார்த் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு 48, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தனர்.

News July 27, 2024

இமானுவேல் மேக்ரானை சந்தித்த நீடா அம்பானி

image

முகேஷ் அம்பானி, அவரது மனைவியும், சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி உறுப்பினருமான நீடா அம்பானி ஆகியோர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்தனர். பாரிஸில் ஒலிம்பிக்ஸ் துவக்க விழாவை நேரில் கண்டு ரசித்த அவர்கள், நிகழ்ச்சிக்கு பின் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். நீடா அம்பானி ஒலிம்பிக்ஸ் கமிட்டி உறுப்பினராக 2ஆவது முறையாக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

News July 27, 2024

இந்திய அணி பேட்டிங்

image

இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள IND அணி, 3 T20 போட்டிகளில் விளையாடுகிறது. கென்டியில் நடைபெறும் முதல் போட்டியில், டாஸ் வென்ற SL அணி கேப்டன் அசலங்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்?

News July 27, 2024

படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர்கள்

image

கேரளாவில் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்தில், நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப் காயமடைந்தனர். அர்ஜுன் டி.ஜோஸ் இயக்கும் ‘ப்ரோமான்ஸ்’ படத்தின் சேஸிங் காட்சி கொச்சியில் எடுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விபத்தில் அர்ஜுனுக்கு லேசான காயம், சங்கீத்துக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News July 27, 2024

தமிழக தொல்லியல் துறையில் சமஸ்கிருதம் திணிப்பா? சீமான்

image

தொல்லியல் தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கு சமஸ்கிருதம் தெரிந்தோர் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும், சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்த அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!