news

News July 27, 2024

இலங்கைக்கு இமாலய இலக்கு

image

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மிரட்டலாக விளையாடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 7 சிக்ஸ், 27 பவுண்டரிகளுடன் 213 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்தனர். ஜெய்ஸ்வால் 40, சூர்யகுமார் யாதவ் 58, பண்ட் 49 ரன்கள் விளாசினர். அக்‌ஷர் படேல்
தனது பங்கிற்கு கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

News July 27, 2024

ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணையில் நாளை நீர் திறப்பு

image

ஆடிப்பெருக்கையொட்டி மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் 7 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஆடிப்பெருக்கு மிக முக்கியமானது. குறிப்பாக, ஆடி மாதம் 18ஆம் தேதி புனித தலங்களில் நீராடி மக்கள் கொண்டாடுவர். இதையொட்டி, நாளை முதல் ஆகஸ்ட் 3 வரை, விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆக.3ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது.

News July 27, 2024

தேர்தல் முடிந்ததும் பாஜகவின் முகமூடி கிழிந்தது

image

மெட்ரோ, இயற்கைப் பேரிடர், தொழில் & நகர்ப்புர வளர்ச்சி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியில்லை. சுருக்கமாக சொன்னால், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடே இல்லை என்று உதயநிதி விமர்சித்துள்ளார். தமிழ் – தமிழ்நாடு என பாசாங்கு செய்தவர்களின் முகமூடி தேர்தல் முடிந்ததும் கிழிந்து தொங்குகிறது எனக் கூறிய அவர், மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

News July 27, 2024

மம்தா குற்றச்சாட்டுக்கு நிதி ஆயோக் விளக்கம்

image

நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க CM மம்தா பானர்ஜி பேசும்போது மைக் பாதியில் ஆஃப் செய்யப்பட்டது என்ற புகாருக்கு நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற 26 மாநில முதல்வர்களுக்கும் பேசுவதற்காக 7 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக, உணவு இடைவேளைக்கு முன்பு பேச அனுமதிக்க வேண்டும் என்ற மம்தாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அவர் 7 நிமிடம் பேசினார் என விளக்கமளித்துள்ளார் .

News July 27, 2024

காசாவில் பள்ளி மீது தாக்குதல்: 30 பேர் பலி

image

மத்திய காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

News July 27, 2024

2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாகும்: பிரதமர் மோடி

image

2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் இந்த லட்சியத்தை நிறைவேற்றுவதில் மாநில அரசுகள் முக்கிய பங்காற்றும் என்றார். சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கைகளை வகுத்து, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான படிக்கட்டாக இந்த கூட்டம் இருக்கும் என்றார்.

News July 27, 2024

அண்ணாமலை நேரில் அஞ்சலி

image

பாஜக முன்னாள் எம்.பி., மாஸ்டர் மதன் (93) உடலுக்கு, அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் இத்தலார் பகுதியைச் சேர்ந்த மாஸ்டர் மாதன், 1998 மற்றும் 1999-2004 வரை நீலகிரி தொகுதி எம்.பியாக இருந்தவர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு அவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை அங்கு வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

News July 27, 2024

SJ சூர்யாவின் போஸ்டரை வெளியிட்ட LIK படக்குழு

image

எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 20ஆம் தேதி `லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ (LIK) படக்குழு எந்த போஸ்டரையும் வெளியிடாத நிலையில், இன்று அட்டகாசமான சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், லவ் இன்சூரன்ஸ் கம்பனி கட்டடத்திற்கு மேல் கையில் ஒரு வாட்ச் போன்ற ஒன்றை வைத்து, எஸ்ஜே சூர்யா அமர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டர் மூலம், பிரதீப்-க்கு தொல்லை கொடுக்க போகும் பாஸாக அவர் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

News July 27, 2024

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( இரவு 10 மணி வரை) 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வெளியே செல்வோர், வாகனத்தில் செல்வோர் பாதுகாப்பாக செல்லவும்.

News July 27, 2024

கட்சிப்பதவி பறிக்கப்படும்: இபிஎஸ்

image

சரியாக செயல்படாத நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என இபிஎஸ் எச்சரித்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்வி தொடர்பாக, தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருகிறார். அதன்படி திருப்பூர், கடலூர் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த அவர், “அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியும்”என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!