news

News July 27, 2024

இந்தியாவுக்கு சாவு பயம் காட்டும் இலங்கை

image

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி மிரட்டலாக விளையாடி வருகிறது. இந்திய பந்துவீச்சாளர்கள் எந்தப்பக்கம் போட்டாலும், இலங்கை தொடக்க வீரர்கள் பாதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் SIX, FOUR-ஆக விளாசினர். இதனால், இலங்கை 12 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்துள்ளது. விக்கெட் விழாமல் இதே சூழல் நீடித்தால், இலங்கை எளிதில் வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

News July 27, 2024

ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றும் வழி

image

*<>இந்த<<>> லிங்கை கிளிக் செய்யவும்.
*Loginஇல் 12 இலக்க ஆதார் எண், கேப்ட்சாவை பதிவிடவும்.
*செல்ஃபோன் எண்ணுக்கு வரும் OTPஐ பதிவிடவும்
*ஆதார் அப்டேட் ஆப்ஷனை செலக்ட் செய்யவும்
*ADDRESS ஆப்சனை செலக்ட் செய்து, புதிய முகவரியை சமர்பிக்கவும்
*தேவையான ஆவணங்களை உள்ளீடு செய்யவும்
*₹50 கட்டணம் செலுத்தி சமர்பித்தால், முகவரி மாற்றம் தொடர்பான SMS கிடைக்கும்.

News July 27, 2024

மீனவர் பிரச்னை: துரை வைகோ கோரிக்கை

image

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, மதிமுக எம்பி துரை வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 25 தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

News July 27, 2024

வலது மற்றும் இடது கையில் பந்துவீசி அசத்திய மென்டிஸ்

image

இந்திய அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில், இலங்கை வீரர் கமிண்டு மென்டிஸ் 2 விதமாக பந்துவீசி அசத்தியுள்ளார். 10ஆவது ஓவரில் சூர்யகுமாருக்கு வீசும்போது left-arum orthodox முறையிலும், கில்லுக்கு வீசும்போது right-arm off break முறையிலும் பந்தை வீசினார். கிரிக்கெட்டில் இதுபோன்று வலது மற்றும் இடது கையில் சமமாக பந்துவீசும் திறனை, ஆம்பிடெக்ஸ்டெரிட்டி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

News July 27, 2024

புதிய வரி விதிப்பால் ₹17,500 சேமிப்பு

image

புதிய வருமான வரி விதிப்பால், நடுத்தர மக்கள் ₹17,500 வரை சேமிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில், ₹3 லட்சம்(L) வரை 0% வரி, ₹3-₹7 L 5%, ₹7-₹10 L 10%, ₹10-₹12 L 15%, ₹12-₹15 L 20%, ₹15 லட்சத்திற்கும் மேல் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் வரியில் இனி ₹17,500 வரை மிச்சமாகும் என்பதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News July 27, 2024

TNPL: திருச்சி அணிக்கு 170 ரன்கள் இலக்கு

image

டிஎன்பிஎல் தொடரில் திருச்சி அணி பெற, திருப்பூர் அணி 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் களமிறங்கிய திருப்பூர் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மான் பாஃப்னா 50, கணேஷ் 39 ரன்கள் எடுத்தனர். திருச்சி அணியின் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டை வீழ்த்தினார். 170 ரன்கள் இலக்கை நோக்கி திருச்சி அணி விளையாடி வருகிறது.

News July 27, 2024

ஜம்முவில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

image

ஜம்மு-காஷ்மீரில் கார் கவிழ்ந்த விபத்தில், 5 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்த்நாக் மாவட்டம் தக்சும் என்ற இடத்தில் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த 8 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 27, 2024

பேட்மிண்டன் போட்டியில் இந்திய இணை வெற்றி

image

பாரிஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை வெற்றி பெற்றுள்ளது. சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் இணை, முதல் போட்டியில் பிரான்ஸின் கோர்பி, லேபர் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இணை, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் இணையை வீழ்த்தியது. அடுத்த சுற்று நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

News July 27, 2024

திமுக சொன்னதை செய்ய வேண்டும்: அன்புமணி

image

மின்சாரத் துறையில் நிர்வாக குறைவும், ஊழலும்தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என அன்புமணி விமர்சித்துள்ளார். தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, மாதம்தோறும் மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்றார். உயர்த்தப்பட்ட 4.8% மின் கட்டணத்தை திருப்ப பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 27, 2024

இந்திய வீரர்களை கலங்கடித்த பத்திரனா

image

முதல் டி20 போட்டியில் இந்திய வீரர்களை தனது ஆக்ரோஷமான வேகப்பந்துவீச்சால் பத்திரனா கலங்கடித்தார். தோனியிடம் கற்ற பாடம், இந்தியாவிற்கு எதிராகவே திரும்பியுள்ளது. குறிப்பாக, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக் ஆகிய 4 முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் தான் இந்தியாவின் ஸ்கோர் 215க்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இல்லையென்றால் 250 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும்.

error: Content is protected !!