India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர்களை அச்சுறுத்தும் வகையில் மத்திய அமைச்சர்கள் கருத்துகள் தெரிவிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை காங். துணைத்தலைவர் கவுரவ் கோகாய் கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்தி மற்றும் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் குறித்து அவையில் பேசக்கூடாத வார்த்தைகளை அமைச்சர்கள் ராஜிவ் ரஞ்சன் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு பேசியதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஜூலை 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ BSNL 4ஜி சேவை 2025 ஜூன் மாதம் தொடங்கப்படலாம் என மத்திய அரசு தகவல் ➤ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பாரிஸ் நகரத்தில் சாலையோரம் வசித்த மக்களை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தினர். ➤காசாவில் இனப்படுகொலை நடத்திவரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு காட்டுமிராண்டி என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார். ➤இந்திய பங்குச் சந்தையில் 3 ஆண்டுகள் வர்த்தகம் செய்ய விஜய் மல்லையாவுக்கு SEBI தடை விதித்துள்ளது.
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாயிற்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாயிற்படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும். வாயிற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி மீது உட்காரக் கூடாது. கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக் கூடாது, ஊதியும் அணைக்க கூடாது. பூவைக் கொண்டு அணைக்க வேண்டும்.
டிஎன்பிஎல் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில், திருப்பூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவரில் 169/8 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மான் பாஃப்னா 50, கணேஷ் 39 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய திருச்சி அணி ஆரம்பம் முதலே திணறியது. அந்த அணி 16.5 ஓவரில் 122 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
*மேஷம் – ஜெயம் உண்டாகும்
*ரிஷபம் – மறதி ஏற்படும்
*மிதுனம் – சுகமான நாள்
*கடகம் – உயர்வு உண்டாகும்
*சிம்மம் – நட்பு சூழல் பெருகும்
*கன்னி – அமைதியான நாள்
*துலாம் – புகழ் அதிகரிக்கும்
*விருச்சிகம் – ஆதரவு கிடைக்கும்
*தனுசு – பெருமையடையும் நாள்
*மகரம் – சுபம் உண்டாகும் *கும்பம் – செலவு அதிகரிக்கும் *மீனம் – போட்டி ஏற்படும்
கர்நாடகாவில் மழைப்பொழிவு காரணமாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை காவிரியில் இருந்து 1.42 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 1.48 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேஎஸ்ஆர் அணையில் இருந்து 1.13 லட்சம் கனஅடியும், கபினியில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி, 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND, 213/7 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக SKY 58, பண்ட் 49, ஜெய்ஸ்வால் 40 ரன்கள் எடுத்தனர். 214 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SL அணி, 19.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்தப் போட்டியில் 1.2 ஓவர்களை மட்டுமே வீசிய ரியான் பராக் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு 14 பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த 49 நாள்களில் நடைபெற்றுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ராணுவ வீரர்களின் தொடர் மரணங்களை ஏற்க இயலாது என்றார். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஆளும் மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.