news

News July 28, 2024

ஜூலை 28: வரலாற்றில் இன்று!

image

*ஜூலை 28 – உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் *1868 – ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. *1972 – இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. *1984 – ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பமானது. சோவியத் யூனியன் கலந்து கொள்ளவில்லை.

News July 28, 2024

அசோக் செல்வன் மீது தயாரிப்பாளர் காட்டம்

image

அசோக் செல்வன், அவந்திகா நடித்துள்ள ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில், அசோக் செல்வன் பங்கேற்காதது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் திருமலை காட்டமாக விமர்சித்துள்ளார். படத்தில் நடிக்க சம்மதித்த பின், டேட்டிற்காக தன்னை 7 மாதங்கள் அலைக்கழித்ததாகவும், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இல்லாவிட்டால் நடிகர்கள் முன்னிலைக்கு வர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

News July 28, 2024

₹2300 கோடியை வேண்டாம் என்று சொன்ன நிறுவனம்

image

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான WIZ-ஐ கையகப்படுத்த சுமார் ₹2300 கோடி கொடுப்பதாக பேரம் பேசியது. ஆனால் அதை வேண்டாம் என மறுத்துள்ளது WIZ நிறுவனம். கூகுளிடம் நம்பகத்தன்மை இல்லாமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. கூகுளின் ஒப்பந்தமானது, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு தளத்தில் தங்களது இலக்கை அடைய வலுவூட்டும் என WIZ நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க யோசனை

image

அமித்ஷா பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் வரை, இரு தரப்பு பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம் என ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார். இதை வாஜ்பாய் அரசு செய்ததாகவும், ஆனால் அமித்ஷாவின் ஈகோ அதை செய்யவிடாமல் தடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முஸ்லீம்களை பாக்., போக சொல்லிவிட்டு, காஷ்மீரை மீட்கபோவதாக அமித்ஷா கூறிவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶பொருள்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

News July 28, 2024

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

image

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் நியூ., அணியை வீழ்த்தி ஒலிம்பிக் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் மந்தீப் சிங், விவேக் சாகர் பிரசாத் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.

News July 28, 2024

இசைவெளியீட்டு விழாவை புறக்கணிக்கும் விஜய்

image

‘தி கோட்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதில் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் விழா நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பதால் விழாவில் விஜய் கலந்து கொள்ளமாட்டார் என கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக போட்டியிடும் என விஜய் முன்பு அறிவித்து இருந்தார்.

News July 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News July 28, 2024

மது குடிக்கும் பெண்கள் இந்த மாநிலத்தில் மிக அதிகமாம்…

image

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் நடத்திய ஆய்வில், எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் 26.3 சதவீத பெண்கள் மது அருந்துகிறார்கள். இது மற்ற மாநிலங்களை விட மிக அதிகமாகும். இரண்டாவது இடத்தில் மேகாலாயா 8.7%, மூன்றாவது இடத்தில் அருணாச்சல் பிரதேசம் 3.3% மாநிலமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

error: Content is protected !!