news

News July 28, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வக்கீல்கள் மீது நடவடிக்கை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் குறித்த காவல்துறையின் அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். குற்றப்பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே வக்கீலாக பதிவு செய்யப்படுவதாகவும், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை நிரந்தரமாக நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News July 28, 2024

போலந்து செல்லும் பிரதமர் மோடி?

image

பிரதமர் மோடி ஆக. 23ஆம் தேதி 2 நாள் அரசு முறை பயணமாக உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து போலந்து நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஒருவேளை போலந்து சென்றால் 40 ஆண்டுகளில் அந்நாட்டுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி இருப்பார். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

News July 28, 2024

இலங்கை வீரர்களை பாராட்டிய சூர்யா

image

முதல் பந்தில் இருந்தே இலங்கை வீரர்கள் சிறப்பாக ஆடியதாக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டியுள்ளார். உலகக் கோப்பையில் தாங்கள் விளையாடிய விதம், ஆட்டம் இன்னும் வெகு தொலைவில் இருப்பதை நினைவூட்டியதாகவும், அணிக்கு எது சரியாக இருக்குமோ, அதை தேர்வு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான நேற்றைய முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News July 28, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை – 28 | ▶ஆடி – 12 ▶கிழமை: ஞாயிறு ▶திதி: அஷ்டமி ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 03:15 PM – 04:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 AM – 04:30 AM ▶சந்திராஷ்டமம்: மகம், பூரம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News July 28, 2024

ராக்கெட் தாக்குதலில் 11 பேர் பலி

image

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஃபுட் பால் மைதானத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 11 பேர் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானில் இருந்து ஹெஸ்பொல்லா ஆயுத குழு ராக்கெட்டை ஏவியதாகவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் 10-20 வயதுடையவர்கள் எனவும் கூறியுள்ளது. இதற்கு ஹெஸ்பொல்லா அமைப்பு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

கோலி சாதனையை சமன் செய்த சூர்யகுமார்

image

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் 58 ரன்களை விளாசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற கோலியின் சாதனையை சமன் செய்தார். கோலி 125 போட்டிகளில் 16 முறை ஆட்ட நாயகன் விருது வென்ற நிலையில், சூர்யகுமார் 69ஆவது போட்டியிலேயே வென்றுள்ளார்.

News July 28, 2024

பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறார்: ப.சிதம்பரம்

image

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதி அமைச்சர் பதில் சொல்ல கடமைப் பட்டிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை என முதல்வர் குற்றஞ்சாட்டிருந்த நிலையில், 2021 பிப்ரவரியில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு அறிக்கையில், மத்திய அரசின் பங்களிப்பு நிதி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியதை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

News July 28, 2024

காந்தி பொன்மொழிகள்

image

➤நீ எந்த விதமான உலகத்தை பார்க்க விரும்புகிறாயோ, அதுபோலவே நீ மாறு. ➤ஒருவனிடம் துக்கமும், தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான். ➤மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகிவிட முடியது. ➤தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட, பெரிய அவமானம் எதுவுமில்லை. ➤எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்துக்கே உண்மைதான் அடிப்படை. ➤ஒரு தியாகி போலச் சாக வீரம் வேண்டும்.

News July 28, 2024

6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்

image

3 மாநில ஆளுநர்களை மாற்றம் செய்தும், 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமாவை ஜனாதிபதி முர்மு ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் மற்றும் தெலங்கானா ஆளுநராக இருந்து வந்த சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராகவும், முன்னாள் ஐஏஎஸ் கைலாசநாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News July 28, 2024

திருமணமானவரை கரம் பிடித்த பெண்ணுக்கு பாதுகாப்பு

image

திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நபரை திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க பாம்பே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முஸ்லீம் உரிமைகள் விதியின் கீழ் கலப்பு திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு, ஆயுதம் தாங்கிய இரு காவலர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பாதுகாப்பு வழங்கப்படும். கணவருக்கு முன்பே திருமணமானதும், குழந்தைகள் இருப்பதும் தெரிந்துதான் தான் திருமணம் செய்து கொண்டதாக அப்பெண் கூறியுள்ளார்.

error: Content is protected !!