news

News July 28, 2024

Olympics: முதல் பாலின சமத்துவப் போட்டி

image

கோலாகலமாக நடைபெற்றுவரும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. 1900 & 1924 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸை நடத்திய பிரான்ஸ், நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் போட்டிகளை நடத்துகிறது. இம்முறை (5,630) ஆண்களுக்கு சம எண்ணிக்கையிலான (5,416) பெண்கள் களம் காண்கின்றனர். அதனால்தான் ‘வரலாற்றின் முதல் பாலின சமத்துவப் போட்டி’ என்று பாரிஸ் ஒலிம்பிக்ஸிற்கு IOC பெயரிட்டுள்ளது. <<-se>>#Olympics2024<<>>

News July 28, 2024

எங்களுடைய ஸ்டைல் வித்தியாசமானது: சுப்மன் கில்

image

இலங்கை அணி வலுவாக இருந்ததை பார்த்து பீதி அடையவில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். முதல் டி20 வெற்றிக்கு பிறகு பேசிய அவர், தங்களுக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டும் தான் தேவை என்பதை அறிந்திருந்ததாகவும், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பேட்டிங் செய்வது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களுடைய ஸ்டைல் வித்தியாசமானது, தங்களுடைய திட்டம் எளிமையானது என்று தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

நிலவில் குடியிருப்புகள் உருவாக்கம்?

image

நிலவில் குடியிருப்புகளை உருவாக்க முடியுமா என உலக நாடுகள் ஆராய்ச்சி செய்து வருவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்து விட்டோம் எனவும், அங்கேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நிலவில் மெதுவாக துருவ பகுதியில் இறங்க முடியும் என்பதை இந்தியா சொல்லிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறீர்களா?

image

பெரும்பாலானோர் தினசரி காபி இல்லாமல் நாளை தொடங்குவதில்லை. எனினும், காலையில் எழுந்த 1 மணி நேரத்திற்குள் காபி குடிக்கலாமா? என்பதை பார்க்கலாம். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, காலையில் தொடர்ந்து காபி குடிப்பது உங்களை அடிமையாக்கும் என்றும், காலப்போக்கில் நன்றாக உணர உங்களுக்கு அதிக காஃபின் தேவைப்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர். எழுந்த உடன் குடிக்காமல் தாமதமாக காபி குடிக்க அறிவுறுத்துகின்றனர்.

News July 28, 2024

மிருகசீரிஷத்தில் பிறந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

image

“வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய ” ஆதிசங்கரர் அருளிய இந்த சிவ பஞ்சாட்சர மிருகசீரிஷம் நட்சத்திர ஸ்லோகத்தை திருநாள், சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் , உடல் & மன சுத்தியுடன் 4 முறை பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும் என்பது ஐதீகம்.

News July 28, 2024

6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று முதல் 2ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

News July 28, 2024

கனவாகிறதா மதுரை எய்ம்ஸ்?

image

மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் பணி நடக்கவில்லை. இதனால், தேர்தலில் வெறும் செங்கல்லை காட்டியே பாஜகவிற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்ப்பட்ட நிலையில், அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் மதுரை எய்ம்ஸ் கனவாகி விடுமோ என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News July 28, 2024

இறுதி போட்டி: IND vs SL பலப்பரீட்சை

image

மகளிர் டி20 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இன்று இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இதுவரை 7 முறை ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி 8ஆவது முறையாக கோப்பையை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் 5 முறை இந்தியாவிடம் தோல்விகண்ட இலங்கை அணி, முதல் முறையாக கோப்பையை வெல்ல குறி வைத்துள்ளதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

News July 28, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இருந்து, இந்திய கலப்பு இரட்டையர் அணி வெளியேறியது. ➤மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால், காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ➤மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ➤இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

News July 28, 2024

₹5 லட்சம் முதலீடு ₹15 லட்சம் வருமானம்

image

அஞ்சலக வைப்பு நிதி திட்டத்தில் 5 வருடங்களுக்கு ₹5 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வுத் தொகையாக ₹7.24 லட்சம் கிடைக்கும். இந்த பணத்தை எடுக்காமல் தொடர்ந்து வங்கி கணக்கிலேயே வைத்திருந்தால், 10 ஆண்டுகளில் வட்டி ₹5.51 லட்சமும், முதிர்வு தொகை ₹10.51 லட்சமும் கிடைக்கும். இதை மேலும் 5 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக முதலீடு செய்தால், வட்டி ₹10.24 லட்சமும், முதிர்வு தொகையாக ₹15 லட்சமும் கிடைக்கும்.

error: Content is protected !!