India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
MNP வசதி மூலம் மொபைல் எண்ணை மாற்றாமலேயே ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்குக்கு மாறும் வசதி 2011இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்டோர் நெட்வொர்க் மாறியுள்ளதாக TRAI தெரிவித்துள்ளது. 1 மாதத்துக்கு 1.1 கோடி பேர் நெட்வொர்க் மாறுவதாகவும், மே மாதம் மட்டும் 1.2 கோடி பேர் மாறி இருப்பதாகவும் TRAI குறிப்பிட்டுள்ளது.
சக்தி வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி அஷ்டமியில் (இன்று) நாகாத்தம்மனை வணங்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அதிகாலையில் நீராடி, விரதமிருந்து, மாலை கோயிலுக்கு சென்று, நாகேஸ்வரியான திவரிதா தேவிக்கு தாழம்பூ மாலைச் சாற்றி, நெய் விளக்கேற்றி, புற்றுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பால் வார்த்து, கருப்பரிசி பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் தீர்க்க முடியாத பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் இதோ:- புதுச்சேரி – கைலாசநாதன், பஞ்சாப் – ஜி.சி. கட்டாரியா, அசாம் & மணிப்பூர் – L.P.ஆச்சார்யா, மஹாராஷ்டிரா – C.P.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் – S.K.கங்வார், ராஜஸ்தான் -H.K.பாக்டே, தெலங்கானா – ஜிஷ்ணு வர்மா, சிக்கிம் – ஓ.பி.மாத்தூர், சத்தீஸ்கர் – ராமன் தேகா, மேகாலயா – விஜயசங்கர்.
டாஸ்மாக் விற்பனையாளர்கள், சூப்பர்வைசர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், டிராபிகானா விஎஸ்ஓபி (2020), ஓல்ட் சீக்ரெட் (2018), வீரன் ஸ்பெசல் (2024) ஆகிய 3 பிராந்திகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்பட்டதாகவும், இதில் அவை குடிக்க தகுதியில்லாதவை என தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் அவற்றை டாஸ்மாக் கடைகளில் விற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் வெற்றியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட பதக்கங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. புகழ்பெற்ற ஈபிள் டவர் கோபுரத்தை புதுப்பிக்கும்போது, எடுக்கப்பட்ட அதன் இரும்பு மாதிரிகள் பதக்கத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பதக்கங்களிலும் 18 கிராம் இரும்புள்ள வகையில், சுமார் 5,084 பதக்கங்களை (ஒலிம்பிக்ஸ் 2,600 & பாராலிம்பிக்ஸ் 2,400) டிசைனர் சாமெட் உருவாக்கியுள்ளார். <<-se>>#Olympics2024<<>>
ஜம்மு பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்தபடி உள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் கூடுதலாக 2,500 வீரர்களை அண்மையில் ராணுவம் நிறுத்தியது. இந்நிலையில், ஒடிசாவில் நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2000 வீரர்களை கொண்ட 2 பிஎஸ்எப் படைப்பிரிவுகளை அங்கிருந்து ஜம்முவுக்கு செல்ல மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறுநீரகக் கல் பிரச்னைக்கு வீட்டு வைத்தியம் மூலமே தீர்வு காணலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், துளசியை ஜூஸ் செய்து, அதில் தேன் கலந்து குடிக்கலாம். எலுமிச்சை ஜூஸை, உப்பு சேர்க்காமல் குடிக்கலாம். இந்த 2 ஜூஸ்களும் நச்சுக்களையும், கழிவுகளையும் வெளியேற்றும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சிறுநீரக கல் கரைந்து வெளியேறும். புதிதாக கல் உருவாகாது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஏற்கெனவே, இன்று நீலகிரி, கோவைக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு தனித்துவமான எண்ணை உருவாக்குவதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். தனி நபருக்கு ஆதார் எண் இருப்பதுபோல், நிலத்திற்கும் Unique Land Parcel Identification Number(ULPIN) என்ற எண்ணை உருவாக்குவதாக கூறியுள்ளார். இதன் மூலம், அந்த இடத்தின் உரிமையாளர் யார்? யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? அதன் மதிப்பு என்ன? போன்ற அனைத்து விவரங்களும் அந்த எண்ணில் பதிவு செய்யப்படும்.
டெல்லி ராஜேந்திர நகரில் செயல்பட்டு வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை 13 முதல் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மழை பெய்தால் அடித்தள பகுதியில் 10 நிமிடங்களில் நீர் தேங்கிவிடுவதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.