news

News July 28, 2024

OLYMPICS DAY 2: ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா!

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் பேட்மிண்டன், ரோயிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல், குத்துச்சண்டை, டென்னிஸ் & வில்வித்தை ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். பேட்மிண்டனில் PV சிந்துவும், குத்துச்சண்டையில் நிகாத் ஜரீனும் களமிறங்க உள்ளனர். 10 மீ., துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் மனு பாகரும், வில்வித்தை மகளிர் அணியும் சிறப்பாக செயல்பட்டால் தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

News July 28, 2024

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக: சோமண்ணா

image

ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் சோமண்ணா அறிவுறுத்தியுள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா & கா்நாடகத்தின் சில பகுதிகள் வரை வியாபித்துள்ள தெற்கு ரயில்வேயின் நிா்வாக செயல்பாடு சிறப்பாக உள்ளதாகப் பாராட்டிய அவர், இங்கு அமிரித் பாரத் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு & ரயில் நிலைய மேம்பாடு திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News July 28, 2024

சொந்தமாக வீடு, நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

நாடு முழுவதும் உள்ள 400 மாவட்டங்களில் 3 ஆண்டுகளில் நிலத்திற்கு என ஆதார் போன்ற ULPIN என்ற எண்ணை உருவாக்க உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம், அந்த இடத்தின் மதிப்பு, உரிமையாளர் விவரத்தை எளிதாக அறியலாம். அத்துடன் ஆதார், <<13723267>>ULPIN<<>> இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டால் ஒவ்வொரு தனி நபருக்கும் எவ்வளவு சொத்துகள் இருக்கிறது, அதன் மதிப்பு என்ன? போன்ற அனைத்து விவரங்களும் தெரியவரும்.

News July 28, 2024

நானி படத்தில் அதிதி பாலன்

image

நானி, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தில் ‘அருவி’ பட நடிகை அதிதி பாலன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. ‘அடடே சுந்தரா’ பட இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள கேங்ஸ்டர் கதைக்களத்திலான இப்படத்தில் ‘பத்ரா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

News July 28, 2024

தமிழகத்துக்கு ₹16 லட்சம் கோடி ஒதுக்கீடு: எல்.முருகன்

image

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ₹16 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த நாட்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று பெயரை குறிப்பிடாததால், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்று சொல்ல முடியாது எனக் கூறிய அவர், நாட்டிலேயே தமிழக பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் ‘முத்ரா’ திட்டத்தில் பயன் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

News July 28, 2024

ஒருவர் எவ்வளவு அசைவம் சாப்பிடலாம்?

image

ஒருவர் எவ்வளவு அசைவம் சாப்பிடலாம் என பலருக்கும் கேள்வி இருக்கும். இதுகுறித்து உடல்நல நிபுணர்கள் தெரிவித்த ஆலோசனையை இங்கு பார்க்கலாம். அசைவம் சாப்பிடுவது நல்லதுதான் என்றும், ஆனால் அளவோடு அதை சாப்பிட வேண்டுமெனவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். 5 பேர் கொண்ட குடும்பம் எனில், வாரம் ஒரு நாள் அரை கிலோ ஆட்டிறைச்சி அல்லது 1 கிலோ கோழிக்கறி அல்லது 1 கிலோ மீன் சாப்பிடலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

News July 28, 2024

பாஜகவை வெற்றிபெற விடக்கூடாது: சுனிதா

image

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற விடக்கூடாது என்று சுனிதா கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் அரசியலை மாற்றிய ஹரியானாவின் மகனான அரவிந்த் கெஜ்ரிவாலை அரசியல் காழ்ப்புணர்ச்சியால்
பிரதமர் மோடி சிறையில் அடைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், டெல்லி & பஞ்சாப்பில் ஏற்பட்ட வளர்ச்சியும், மாற்றமும் ஹரியானாவில் உருவாவதை தடுக்க பாஜக சதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

அடுத்த 4 ஆண்டுகளில் இது செயல்பாட்டுக்கு வரும்!

image

2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 76.42 ஜிகா வாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அலகுகள் செயல்பாட்டுக்கு வருமென மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், 2014இல்76 ஜிகா வாட் என்றளவில் இருந்த எரிசக்தித்திறன், 2024 ஜூனில் 195 ஜிகா வாட்டாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

News July 28, 2024

இந்தியாவில் புற்றுநோய்க்கு தினமும் 323 பெண்கள் பலி

image

இந்தியாவில் புற்றுநோய்க்கு 2023ஆம் ஆண்டில் தினமும் 323 பெண்கள் பலியானதாக மத்திய சுகாதார துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 2022இல் 1,14,896ஆக இருந்த பலி, 2023இல் 1,18,120ஆக அதிகரித்து விட்டதாக கூறியுள்ளார். 2023இல் மார்பக புற்றுநோய்க்கு 82,429, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு 25,691 பெண்கள் பலியானதாக தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

“ஆம்ஸ்ட்ராங் கொலை: திமுக முக்கியப் புள்ளிக்கு தொடர்பு?”

image

ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவின் முக்கிய நபருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று முன்னாள் தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜ் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் தமாகா நிர்வாகி ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பேட்டி அளித்த யுவராஜ், யாரோ ஒருவரை திருப்தி செய்ய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதுபோல் ஹரிஹரனுக்கு நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!