India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியன் வங்கி அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரியாத வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் மூலம் இந்தியன் வங்கி பெயரில் போலியாக வரும் லிங்குகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம், செயலி, கோப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், அப்படி செய்வதால் தகவல்கள் திருடுப் போக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இதுபோல், லிங்குகள், செயலி, கோப்புகளை இந்தியன் வங்கி அனுப்புவதில்லை எனவும் கூறியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் ஜோ ரூட் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 87 ரன்களை அடித்த ஜோ ரூட் தனது டெஸ்ட் கெரியரில் 143 பங்கேற்று 12,027* ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன் லாரா 11,953 ரன்களுடன் 7ஆவது இடத்தில் இருந்தார். தற்போது அவரின் வாழ்நாள் சாதனை தற்போது ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
28ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள், நியூமராலஜியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை இங்கு காணலாம். * எதிலும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார்கள் *நேரான பாதையை தேர்வு செய்து பயணிப்பார்கள். குறுக்கு வழியில் செல்ல மாட்டார்கள் *மனவலிமை மிக்கவர்களாக இருப்பார்கள் *கர்வம் கொள்ளாத மனப் பக்குவம் பெற்றவர்கள் *நீதிமான்களாகத் திகழ்வார்கள் * நிதானப் போக்கை உடையவர்கள். இவர்களை யாரும் விமர்சிக்க இயலாது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை தொடர்ந்து, குறைந்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் கறிக்கோழி (உயிருடன்) விலை ₹13 குறைந்து ₹103ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் 1 கிலோ கோழி இறைச்சி ₹160 முதல் ₹220 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் காரணமாக வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் பகுதியில் எவ்வளவுக்கு விற்பனையாகிறது?
நாட்டில் வெள்ள மேலாண்மைக்கு விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. வெள்ளக் கட்டுப்பாடு & முன்னறிவிப்புத் திட்டங்களின் செயல்திறன் தணிக்கை தொடா்பான அக் குழுவின் அறிக்கை, 18ஆவது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் டெலிமெட்ரியை நிறுவுவதில் நிலவும் தாமதம் குறித்து அந்தக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
வானில் இருந்து பார்க்கையில் கீழே மனித வடிவில் நகரம் ஒன்று உள்ளது. அது எந்த நாட்டில் உள்ளது என தெரியுமா? இத்தாலி நாட்டின் சிசிலி தீவில்தான் அந்நகரம் அமைந்துள்ளது. பழமையான சென்டூரிப் நகரம்தான் அந்நகராகும். அங்கு சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் பெரி என்பவர் முதன்முதலில் அந்நகரை வானில் இருந்து புகைப்படம் எடுத்தபோதுதான் இந்த அதிசயம் உலகுக்கு தெரிய வந்தது.
2002இல் துள்ளுவதோ இளமை மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ், 2ஆவது படமான காதல் கொண்டேனில் வெளிப்படுத்திய மிரட்டல் நடிப்பால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். காதல், பழிவாங்கல், விரக்தி, சோகம், அதிரடி, தோல்வி என அனைத்து கதாபாத்திரங்களிலும் கமலுக்கு அடுத்து தனுஷாலேயே நடிக்க முடியும் என்பது ரசிகர்கள் பார்வை. தனுஷுக்கு இன்று 41ஆவது பிறந்த நாள். அவருக்கு Way2News சார்பில் வாழ்த்துகள்.
ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியாவில் நவீன வடிவமைப்புடன் உலகின் முதல் ‘ஆல்வெதர் கிரிக்கெட் ஸ்டேடியம்’ கட்டப்பட்டு வருகிறது. அதன் சிறப்பம்சம் என்னவெனில், AI தொழிற்நுட்பத்தில் இயங்கும் ட்ரான்ஸ்பரண்ட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. அது எத்தகைய வானிலையிலும், விளையாட்டுக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளும். 23,000 பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் 2029இல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
எப்போதாவது திடீரென காய்ச்சல் வந்தால், அதனால் பல நன்மைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன? *ரத்த வெள்ளை அணு உற்பத்தியை அதிகரிக்கும் *பாக்டீரியா, வைரஸை கட்டுப்படுத்தும் *நோய் எதிர்ப்பு சக்திகளான சைட்டோகைன்கள் எனப்படும் புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் *உடல் பாகங்களை தானே சரி செய்யும் செயல்முறையை ஊக்குவிக்கும்* வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து நச்சுக்களை நீக்கும்
தேர்தலுக்கு பிறகு, IAS அதிகாரிகள் 60 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் உள்துறை செயலாளர் அமுதாவும் ஒருவர் என்பதால் பரபரப்பு அதிகரித்தது. இது அடங்குவதற்குள், சென்னை ஆணையர் உள்ளிட்ட பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும், பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.