news

News July 28, 2024

போதைப் பொருள்களை கட்டுப்படுத்த சிறப்பு அமைப்பு

image

போதைப் பொருள்களை கட்டுப்படுத்த “மானாஸ்” சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மானாஸ் அமைப்புக்காக ஹெல்ப்லைன் எண்ணும், இணையதளமும் துவங்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசும் 1933 என்ற உதவி எண்ணை வெளியிட்டிருப்பதாகவும், தகவல் அளிக்கவோ, ஆலோசனை பெறவோ அதை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

News July 28, 2024

அனைத்துக்கும் கம்பீரே காரணம்: ரியான் ஃபராக்

image

தனது பந்துவீச்சு சிறப்பாக அமைய கவுதம் கம்பீரின் ஆலோசனை உதவிகரமாக இருந்ததாக ரியான் ஃபராக் தெரிவித்துள்ளார். வலைப்பயிற்சியில் பந்துவீச்சு குறித்து கம்பீர் ஆலோசனை வழங்கியதாக தெரிவித்த அவர், மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் போது தயங்காமல் பந்து வீசுமாறு வழிகாட்டியதாக கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் 10 பந்துகளில் 3 விக்கெட்டை அவர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

News July 28, 2024

DOCTOR DOOMஆக நடிக்கும் அயர்ன்மேன் ஹீரோ

image

ராபர்ட் டவ்னி ஜூனியர் நடித்த அயர்ன்மேன் கதாபாத்திரம், அவெஞ்சர்ஸ் தி என்ட்கேம் 2019 படத்துடன் முடிவுக்கு வந்தது. இதனால் ராபர்ட் டவ்னி ஜூனியரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்த நிலையில், அவெஞ்சர்ஸ்சின் புதிய 2 படங்களில் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் பட வில்லனான DOCTOR DOOM கதாபாத்திரத்தில் அவர் அயர்ன்மேன் போல இரும்பு முகக் கவசம் அணிந்து நடிக்கவுள்ளார்.

News July 28, 2024

Olympics: முதல் சுற்றில் சிந்து அபார வெற்றி

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸின் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவுக்கான தனது முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற குரூப் ஸ்டேஜில் அவர் மாலத்தீவைச் சேர்ந்த வீராங்கனை பாத்திமாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய அவர், 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமாவை வீழ்த்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளார். <<-se>>#Olympics2024<<>>

News July 28, 2024

சுருண்ட தலைமுடி நேராக…

image

சுருண்ட தலைமுடி சில பெண்களுக்கு அழகாகவும், சிலருக்கு அழகை கெடுக்கும் வகையிலும் இருப்பதாக கருதுவர். அவர்களுக்கு சுருண்ட தலைமுடியை நேராக்க அழகுக்கலை நிபுணர்கள் எளிய யோசனையை முன்வைக்கின்றனர். அதாவது, 1 வாழைப்பழம் , தேன் 4 ஸ்பூன் கலந்து பிசைந்ததும் வரும் கலவையை தலைமுடியில் தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரம் 3 முறை இதை செய்தால் சுருண்ட தலைமுடி நேராகும் என பரிந்துரைக்கின்றனர்.

News July 28, 2024

இனி ₹7.5 லட்சம் வரை கடன் பெறலாம்

image

₹1.5 லட்சமாக இருந்த மத்திய அரசின் மாதிரி திறன் கடன் திட்டத்தின் வரம்பு, தற்போது ₹7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 31 வரையில் கடன் வாங்கியுள்ள 10,077 நபர்களுக்கு, கடன் தொகையை நீட்டிப்பதற்காக ₹115.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25,000 மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. வங்கிகள், நிதி, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களிலும் கடன்களை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 28, 2024

30 நாள்களில் 87 தமிழக மீனவர்கள் கைது

image

ஜூன் 25இல் நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து, 25 ராமேஸ்வரம் மீனவர்கள் உள்பட 77 பேர் அடுத்தடுத்து 30 நாள்களில் கைது செய்யப்பட்டனர். கைதை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தியும், மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் வந்த நிலையில் இது நடந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் மீது அப்பகுதி மீனவர்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

News July 28, 2024

மீண்டும் களத்திற்கு திரும்பும் டீன்ட்ரா டாட்டின்

image

ஓய்வை அறிவித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை டீன்ட்ரா டாட்டின், மீண்டும் களத்திற்கு திரும்புகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக கடந்த 2022ஆம் ஆண்டு அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் விளையாட இருப்பதாக கூறியுள்ளார். மகளிர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

News July 28, 2024

BREAKING: முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த நிலையில், பாசனத்திற்காக எப்போது திறப்பது என டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். காவிரியில் தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 நாள்களில் 21 அடி உயர்ந்து 109 அடியை தாண்டியது.

News July 28, 2024

“சிறார் திருமண தடை சட்டம் முஸ்லிம்களுக்கும் பொருந்தும்”

image

பாலக்காட்டைச் சேர்ந்த முஸ்லிம் சிறுமிக்கு திருமணம் செய்தது தொடர்பாக தந்தை, கணவர் மீது சிறார் திருமண தடை சட்டத்தின்கீழ் 2012இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தாங்கள் முஸ்லிம்கள் என்பதால் அச்சட்டம் பொருந்தாது எனக்கூறி 2 பேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சிறார் திருமண தடை சட்டம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும். இதில் மதரீதியில் வேறுபாடு கிடையாது என தீர்ப்பளித்தது.

error: Content is protected !!