India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் விஜய் தன்னை அழைத்தால் தவெகவில் சேர தயாராக உள்ளதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். நெருக்கடி காரணமாக அரசியலுக்கு நிச்சயம் வர உள்ளதாகவும், விஜய், சீமானுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாசிசத்திற்கும், ஆரியத்துக்கும் எதிரானதுதான் திராவிடம் என்றும், அதுதான் திராவிடத்தின் அடையாளம் எனவும் கூறிய அவர், அந்த உணர்வு நமது ரத்தத்திலேயே உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் பெவ் பிரிஸ்ட்மேனை கனடா இடைநீக்கம் செய்துள்ளது.
போட்டிக்காக நியூஸிலாந்து மகளிர் அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ட்ரோன் மூலம் அந்த அணியை அவர் உளவு பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இது தொடர்பாக நியூஸிலாந்து அணி, IOC-யிடம் புகாரளித்தது. இந்நிலையில், பிரச்னையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கனடா ஒலிம்பிக் சங்கம் மன்னிப்புக் கேட்டு சூழலை சரி செய்துள்ளது.
வேக வைத்த சிக்கனோடு சீஸ், கரம் சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மிளகு, உப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, புதினா இலைகளைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை விரும்பும் வடிவில் செய்துகொள்ளவும். அதனை கலக்கி வைத்த முட்டையில் பிரட்டி, அவற்றின் மீது ரொட்டித்தூளை தூவவும். அதன் பின் எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி. இதனை சாஸுடன் தொட்டு சாப்பிடலாம்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சாலையோரம் பல குறியீடு கொண்ட எச்சரிக்கை போர்டு இருக்கும். அதில் ஒன்று “T” குறியீடு போர்டு ஆகும். இது எதை குறிக்கிறது தெரியுமா? பயணிக்கும் சாலையின் குறுக்கே மற்றொரு சாலை வர போகிறது. இனி நேரே செல்ல முடியாது. இடது அல்லது வலது பக்கம் திரும்ப வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். இதை பார்த்து, வாகன ஓட்டி இடதுபுறம் செல்ல வேண்டுமா, வலதுபக்கம் செல்ல வேண்டுமா என்பதை முடிவெடுத்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.
ஓடும் ரயிலில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து வைரலானவர் மும்பையை சேர்ந்த ஃபர்ஹத் ஆசம் ஷேக். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ மூலம் பிரபலமான அவர், அதே போன்று ஒரு வீடியோவை மீண்டும் எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி ரயில் தண்டவாளத்தில் விழுந்த அவர், தனது ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்துள்ளார். இதற்கிடையே, தன்னை போல் யாரும் இதுபோன்று ஸ்டண்ட் செயல்களை செய்ய வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துடுப்புப் படகு போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் ரீப்பேஜ் சுற்றில் மறுவாய்ப்பில், 7.12 நிமிடங்களில் இலக்கை அடைந்த அவர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். <<-se>>#Olympics2024<<>>
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், கொலைக்கு காரணமானவர்களை போலீசார் நெருங்கியதாக தெரியவில்லை. கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை பிற்பகல் 3 மணிக்கு திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கவும், நீர் வரத்தை பொருத்த படிப்படியாக தண்ணீர் அளவு உயர்த்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடி பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில், நீர் திறந்துவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து 1.48 லட்சம் கன அடி உபரி நீர் காவிரிக்கு வருகிறது.
தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து, தண்ணீரை சேமிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். தான் ஒரு டெல்டாக்காரன் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்டா பகுதி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார். தண்ணீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தும் நிலையை தவிர்க்க, தண்ணீரை சேமிக்கும் வழிமுறைகளை ஆராய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.