India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் அதிகாலையில் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு கடல் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 2 படகுகள், வலைகள், மீன்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 4-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கைது படலம் தொடர்வதாக தமிழ்நாடு மீனவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நேற்று போலவே இன்றும், தங்கம் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 உயர்ந்து $4,592 ஆக மாறியுள்ளது. இதனால், இன்றும் இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை(₹1,04,960) எட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக CBI விசாரணைக்கு விஜய் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது, கூட்ட நெரிசல் நடந்தது எப்படி? எத்தனை பேர் கூடுவார்கள் என்பது முன்பே தெரியுமா? பரப்புரைக்கு தாமதமாக வர காரணம் என்ன? போலீசார் தடியடி நடத்தியது தெரியுமா? என்பது உள்ளிட்ட 100 கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவர் அளித்த பதில்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

NDA கூட்டணியில் இணைய TTV தினகரன் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு ராஜ்யசபா MP சீட், 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் மத்தியில் ஒரு இணையமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என கூறி அதிர வைத்துள்ளாராம். இதையடுத்து அவரை டெல்லி வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். இதனால், அவர் விரைவில் டெல்லி பறக்கலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஒரு சிலருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிரமம் இருந்தது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் முதியவர்களின் விரல் ரேகை பதிவு செய்யும் போது, ஒப்புதல் பெற தாமதம் ஏற்படுவதால், அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, விரல் ரேகை சரிபார்ப்பில் பாதிப்பு ஏற்பட்டால், கண் கருவிழி ரேகை கருவியை பயன்படுத்தி, பொங்கல் தொகுப்பு வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

‘பராசக்தி’ படம் குறித்து விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவ் ராம்நாத் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டில் ரிலீசான ஒரு படத்திற்கும் இதேபோன்று அவர்கள் செய்தனர். உங்கள் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் நாங்களா தடுத்தோம்? நாங்கள் தான் ரிலீஸ் தேதி முதலில் அறிவித்தோம். விஜய் ரசிகர்களின் செயல் யாருக்கும் நல்லதல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

▶ஜனவரி 13, மார்கழி 29 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

புதிய கலால் திருத்த மசோதா வரும் பிப்.1-ல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, <<18461895>>சிகரெட்<<>> உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கான வரி பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஆனால், இந்த சட்டம் அமலுக்கு வரும் முன்பே பல்வேறு பகுதிகளில் சிகரெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் பதுக்க தொடங்கி, குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு அனுப்பவதால், அனைத்து வகையான புகையிலை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

CBI விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரவில் சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. இதனால், NDA கூட்டணியில் தவெக இணைவது உறுதியானதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அப்படிப்பட்ட சந்திப்பே நடக்கவில்லை என தவெக தரப்பு உறுதியாக மறுத்துள்ளது. விசாரணை முடிந்து அறைக்கு வந்த விஜய், உடனே சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்றதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.