India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரீஸ் ஒலிம்பிக்ஸிற்கு சென்ற வீரர்களுக்கு வழங்கப்பட்ட உடைகள் வசதியாக இல்லை என இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் தனது X பக்கத்தில், ஆண்களின் உடைகள் எளிதில் கிழிந்து போகின்றன. ரவிக்கை பொருத்தமாக இல்லாததால் சேலையை அணிய பெண்கள் சங்கடமாக உணர்கிறார்கள். நம் கலாச்சாரத்தைக் காட்சிப்படுத்த வடிவமைப்பாளர் தவறிவிட்டார் எனப் பதிவிட்டுள்ளார்.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, அனைத்து முருகன் கோயில்களிலும் காலையில் இருந்தே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலின் கோபுரத்தில் இருந்து கால் தவறி கீழே விழந்த பழனி என்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்குற்றங்கள் எல்லா காலங்களிலும் நடந்துகொண்டு தான் இருக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கொலை குற்ற சம்பவங்களில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்த அவர், இத்தகைய சம்பவங்களை தடுக்க அரசும், காவல்துறையும் தீவிர அக்கறை காட்டுவதாகக் கூறியுள்ளார். தமிழக அரசில் புதிய மாற்றம் வருமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
G.O.A.T படத்தின் அடுத்த அப்டேட் ஆகஸ்ட் 1இல் வர உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், படம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 5இல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் தொடர்பாக அடுத்த அப்டேட் இருக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.
திமுகவை சேர்ந்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. திமுக கவுன்சிலர்கள் 22 பேர் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்ந்து 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் MI அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. DT, KKR, LSG உள்ளிட்ட பல அணிகள் இவரை ஏலத்தில் எடுக்க முனைப்புக் காட்டி வருகின்றன. MI அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்ற 5 முறை அந்த அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தாண்டு நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் ரோஹித் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்படுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப், அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்துள்ளார். வக்கீலாக பணியாற்றியபோது சான் பிரான்சிஸ்கோவை அழித்த கமலா ஹாரிஸ் அதிபரானால் ஒட்டுமொத்த நாட்டையும் அழித்து விடுவாரெனக் கூறிய அவர், அதே சமயம் தான் அதிபரானால் நாட்டில் நிலவும் குழப்பங்களைத் தீர்த்து, சட்ட ஒழுங்கு & நீதியை மீட்டெடுப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
அருள்நிதி நடித்த ‘டிமாண்டி காலனி 2’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள, இதில் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிசந்திரன், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து இன்னும் ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கவுள்ளதாக மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் குறைந்தபட்ச விலை ₹42ஆக உயர்த்த வலியுறுத்தி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு விலையை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்ஸின் வில்வித்தை போட்டியின் முடிசூடாத மன்னராக தென் கொரியா வலம் வருகிறது. 1988இல் சியோல் ஒலிம்பிக்ஸில் வில்வித்தை போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், தென் கொரியா பெண்கள் அணி வென்றது. அதன்பின், நடந்த எந்த ஒலிம்பிக்ஸிலும் ஒருமுறைகூட தங்கப்பதக்கத்தை வேறு எந்த நாடும் வென்றதில்லை. 1988 தொடங்கி 2020 வரையில் நடந்த 9 போட்டிகளைத் தொடர்ந்து 10ஆவது முறையாக பாரிஸிலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.