news

News July 29, 2024

ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்த மனு பாக்கர்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மனு பாக்கருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி பழுதானதால் முதல் சுற்றிலேயே வெளியேறிய மனு பாக்கர், தளராத முயற்சியினால், தற்போது பதக்கத்தை தன்வசமாக்கியுள்ளதாக பாராட்டி வருகிறார்கள். மேலும், 2 போட்டிகளில் அவர் விளையாட உள்ளதால் பதக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News July 29, 2024

ஜாக் காலிஸின் சாதனையை சமன் செய்த பென் ஸ்டோக்ஸ்

image

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் காலிஸின் சாதனையை, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில், மிஸ்பா உல் ஹக் 21, வார்னர் 23 , பென் ஸ்டோக்ஸ்/ ஜாக் காலிஸ் – 24 ஷேன் ஷில்லிங்போர்டு – 25 பந்துகளில் அரைசதம் எடுத்துள்ளனர்.

News July 29, 2024

25 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்புவது எப்போது? சீமான்

image

அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வரை 23 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அது 19 ஆயிரம் பேருந்துகளாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய
அவர், போக்குவரத்து துறையில் 25 ஆயிரம் காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News July 29, 2024

மக்களவையில் இன்று ராகுல் உரை?

image

மக்களவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் 2024 மீது உரையாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என ராகுல் பட்ஜெட்டை விமர்சித்திருந்த நிலையில், ராகுலின் உரை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. INDIA கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே போராட்டம் நடைபெற்றது.

News July 29, 2024

4 லட்சம் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் சுசூகி

image

இக்னிஷன் காயிலில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, 4 லட்சம் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக சுசூகி மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. கடந்த 2022 ஏப்ரல் 30 முதல் டிச., 3 வரை தயாரிக்கப்பட்ட ஆக்சிஸ் 125, பர்க்மேன் 125, அவெனிஸ் 125 ஆகிய ஸ்கூட்டர்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்கள் அருகில் உள்ள சுசூகி சேவை மையத்தை நாடி, உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு சுசூகி கேட்டுக் கொண்டுள்ளது.

News July 29, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி

image

*ஜப்பான்: சகாமினாடோ கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய 11 மீனவர்களை கடலோரப் படையினர் மீட்டனர். *ரஷ்யா: வோல்கோகிராட் நகரில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த C-34 ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. *ஆப்கன்: ஆப்கனில் கடந்த ஓராண்டில் சுமார் 15,000 பேர் ஹெபடைடிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். *மியான்மர்: கனமழைக் காரணமாக மியாவாடி உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

News July 29, 2024

TNPL: 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

image

டிஎன்பிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. கடைசி 4 இடங்களை பிடித்த நெல்லை கிங்ஸ், திருச்சி சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், பிளே-ஆப் சுற்று நாளை தொடங்குகிறது.

News July 29, 2024

தங்கம் விலை ₹400 குறைவு

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹400 குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 குறைந்து ₹51,320க்கும், கிராமுக்கு ₹50 குறைந்து ₹6,415க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ₹89.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 நாள்களுக்கு பின், நேற்று முன் தினம் தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.

News July 29, 2024

நீதிபதியின் வீட்டில் குப்பை வீசியவர்கள் கைது

image

கேரள உயர்நீதிமன்ற நீதிபதி நரேந்திரனின் வீட்டின் முன்பு குப்பை வீசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சியில் உள்ள நீதிபதியின் வீட்டிற்கு முன்பு 2 பைகளில் குப்பைகள் கிடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 2 இளைஞர்களை கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவர்கள் நீதிபதி வீடு எனத் தெரியாமல் குப்பையை வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News July 29, 2024

சினிமா ட்ரெண்டிங் மாறுகிறதா?

image

பொதுவாக பிரபல நடிகர்களின் 50ஆவது, 100ஆவது படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இதற்கு மாறாக நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது படமான ‘மகாராஜா’ மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து, தற்போது தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த அனைத்து தரப்பினரும் தனுஷின் நடிப்பு, இயக்கத்தை பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!