news

News July 29, 2024

முன்விரோதமே கொலைகளுக்கு காரணம்: ரகுபதி

image

சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழ்நாடு மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். முன்விரோதம் காரணமாகவே தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறுவதாக தெரிவித்த அவர், பழிக்கு பழியாக நடைபெறும் கொலைக்கு அரசாங்கம் எப்படி பொறுப்பாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொலைகளை வைத்து அரசியல் செய்ய இபிஎஸ் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News July 29, 2024

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

image

திமுக MLAக்களுக்கு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த உடன், அது ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது.

News July 29, 2024

தொடங்கியது பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு!

image

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. முதல் சுற்றில் 30,264 மாணவர்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 26,654 மாணவர்கள், 7.5% இட ஒதுக்கீட்டில் 1,343 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 2,267 மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 433 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,79,938 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளன.

News July 29, 2024

Olympics: ஜிம்னாஸ்டிக்ஸை கொண்டாடும் சிறப்பு டூடுல்

image

124 ஆண்டுகள் கழித்து பாரிஸில் நடக்கும் 33ஆவது ஒலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழாவைக் கொண்டாடும் வகையில் 4ஆவது நாளாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதில், வீட்டின் பால்கனியில் புறா நடன அசைவுகளை மேற்கொள்வதை பூனையொன்று ஜன்னல் வழியே பார்ப்பது போல குறியீடு வைக்கப்பட்டுள்ளன. Artistic Gymnastics போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

News July 29, 2024

முதல்வர் பதவி விலக வேண்டும்: அன்புமணி

image

தொடர் அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஒரே நாளில் மட்டும் 3 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை அறிய இது ஒன்றே போதுமானது என்றார். குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News July 29, 2024

தொழிலாளர்கள் உரிமை காக்க தனிநபர் மசோதா தாக்கல்

image

AI தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மௌசம் நூர், இந்த தனிநபா் மசோதா தாக்கல் செய்துள்ளார். அதில், AI-ஐ பயன்படுத்தி பாகுபாடு காட்டக் கூடாது, தங்களை பாதிக்கும் முடிவுகளை நிராகரிக்க பணியாளர்களுக்கு உரிமை வழங்குவது போன்றவை வலியுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா மாநிலங்களவை விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

News July 29, 2024

BREAKING: ஆக.1 முதல் +2 அசல் மதிப்பெண் சான்று

image

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்/மதிப்பெண் பட்டியல் ஆக.1 முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு www.dge.tn.gov.in-இல் பார்த்துக் கொள்ளவும்.

News July 29, 2024

காஞ்சி மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து?

image

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுகவை சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த 22 கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இன்று வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், போதுமான கவுன்சிலர்கள் வராததால் சிக்கல் நிலவி வருகிறது.

News July 29, 2024

வெளிநாடு செல்வோருக்கு இது கட்டாயமில்லை!

image

வெளிநாடு செல்லும் அனைவரும் வரித்துறையின் அனுமதிச்சான்றிதழ் பெற வேண்டும் என்ற
அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. அனுமதிச்சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் & அதிக அளவு வரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரி அனுமதி சான்றிதழ் தேவை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

News July 29, 2024

11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூர் அணையிலிருந்து, இன்று நண்பகல் 12 மணிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்படவுள்ளது. இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது. கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!