India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாக கூறி இந்தியாவில் உள்ள இளைஞர்களின் முதுகில் பாஜக அரசு குத்திவிட்டதாக ராகுல் விமர்சித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், கொரோனா போது டார்ச் அடிப்பதும், விளக்கேற்றுவதும் தான் மோடி இளைஞர்களுக்கு வழங்கிய வேலையா? எனக் கேள்வி எழுப்பினார். மோடியின் சக்கர வியூகத்தை காங்கிரஸ் கட்சி முறியடிக்கும் என்ற அவர், பாஜகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
2024 -25ஆம் கல்வியாண்டில் பல சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், வரும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்த நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆக.3, 4, (சனி, ஞாயிறு), ஆக.11 (ஞாயிறு), ஆக.15 (சுதந்திர தினம் பொதுவிடுமுறை), ஆக.17, 18 (சனி, ஞாயிறு), ஆக.25 (ஞாயிறு), ஆக.26 (கிருஷ்ண ஜெயந்தி பொதுவிடுமுறை), ஆக.31 சனி என 9 நாள்கள் விடுமுறை வருகிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட
ஜாமினை ரத்து செய்ய, உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜாமினில் வெளியே இருந்தால், குற்றங்களை அவர் தொடர்ந்து செய்வார் என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் ஜாமின் உத்தரவு சரியே என்றும் கூறியுள்ளது. ராஞ்சியில் 8.8 ஏக்கர் நிலத்தை அவர் அபகரித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்திய அணி முதல் இடத்திலும் 68.52%, ஆஸ்திரேலியா 62.50 %, நியூசிலாந்து 50%, இலங்கை 50% , பாகிஸ்தான் 36.66 % புள்ளிகளை பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த 3ஆவது டெஸ்டில் வென்று இங்கிலாந்து அணி கூடுதல் புள்ளிகள் பெற்ற நிலையிலும், முன்பு இருந்த அதே 6ஆவது இடத்திலேயே தொடர்கிறது.
பாஜக ஆட்சியில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்களே அச்சத்தில் உள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். மக்களவையில் ராகுல் பேசும்போது, பாஜகவில் ஒருவர் மட்டுமே பிரதமராக வர முடியும் என மோடியை விமர்சித்த அவர், ராஜ்நாத் சிங் பிரதமராக வர முயற்சித்தால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார். இந்திய மக்கள் அனைத்து விஷயங்களிலும் ஒருவித அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீ., ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெற்றிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் 3ஆவது இடம் பிடித்ததால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு இந்திய இணை தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் 4ஆம் இடம்பிடித்த தென் கொரியாவின் ஓயே ஜின் – லீ வோன்ஹோ இணையுடன் இந்திய இணை மோதவுள்ளது.
தமிழக அரசின் தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என TNPSC அறிவித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இதனை மறைமுகமான சமஸ்கிருதத் திணிப்பாக தமிழுணர்வாளர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், தரவுகளை ஆய்வு செய்யவும், தர்க்க ரீதியில் சான்றுகளை நிறுவவும் சமஸ்கிருதத்தையும் அறிந்திருப்பது நல்லதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்களையும் முன்வைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நாளை முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கப்பெறும் (குறிப்பாக இடைக்கால பல்லவர் & சோழர்) கல்வெட்டுகள் & சாசனங்கள் பிராகிருதம் & சமஸ்கிருதம் மொழியில் நிறைய காணக் கிடைக்கின்றன. அவற்றை ஆய்ந்து அறிய, உலகிற்கு தொல் தென்னகத்தின் வரலாற்றை நிறுவ அம்மொழிகளோடு சீனம் உள்ளிட்டவற்றையும் தமிழர்கள் கற்க வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கூடுதல் விலையில் செலுத்துவதாக புகார் எழுந்தது. இதைத் தடுக்கும் வகையில், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்றும், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை 16 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.