India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 3 கட்டங்களாகவும், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 3 கட்டங்களாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இளநிலை மருத்துவப் படிப்பு வகுப்புகள் தொடங்கவுள்ளன.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) பட்டய கணக்கியல் (CA) 2024 முடிவுகளை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜூன் 20, 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. https://icai.org/ அல்லது https://icai.nic.in/caresult/ என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் மொபைல் நம்பரை உள்ளிட்டு தேர்வு முடிவுகளைக் காணலாம். சிஏ இன்டர் மற்றும் இறுதி முடிவுகள் ஜூலை 11இல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் மாதிரியான இடங்களில் மது விற்பனை சாத்தியமா என பரிசீலிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஊழலை தடுக்க ரேஷன் கடைகளிலும், சூப்பர் மார்கெட்களிலும் மது விற்பனையை அனுமதிக்குமாறு, ஐடி ஊழியர் முரளிதரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஜியோ பாரத் J1 4G செல்ஃபோன், ₹1,799க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதில், Jio Money UPI பேமண்ட் வசதி, ஜியோ டிவியை நேரலையாக பார்க்கும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2.8 இஞ்ச் டிஸ்ப்ளேவுடன், 23 இந்திய மொழிகளுடன் இந்த ஃபோன் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதனை அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ மார்ட் போன்ற ஆன்லைன் சந்தைகளில் வாங்கலாம்.
நவ.1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறிய நடிகர் சங்கம், திரைத் தொழிலாளர்களை பாதிக்கும் இந்த முடிவை உடனே திரும்பப் பெற கோரிக்கை வைத்துள்ளது. மேலும், நட்புறவு பாதிக்காமல் இந்த பிரச்னைக்கு தீர்வு காண தயாரிப்பாளர் சங்கம் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகை ₹250லிருந்து ₹350ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுக்கான நிவாரணம் ₹6 லட்சமாகவும், நாட்டுப் படகுகளுக்கான நிவாரணம் ₹2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் தென் கொரிய வீரர்கள் வில்வித்தையில் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர். 1984 முதல் அவர்கள் வில்வித்தையில் 27 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஆரம்பப் பள்ளியில் இருந்தே அவர்களுக்கு வில்வித்தை கற்றுத்தரப்படுவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதற்காக உபகரணங்களை இலவசமாக கொடுக்கும் அரசு, கட்டணமும் வசூலிப்பதில்லை. தென் கொரிய மகளிர் அணி ஏற்கெனவே ஒலிம்பிக் 2024 தொடரில் தங்கம் வென்றுள்ளனர்.
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். திமுகவின் சட்ட போராட்டத்தால் கடந்த 3 ஆண்டுகளில் OBC மாணவர்களுக்கு 15,066 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் மாதம் வங்கிகள் 8 நாள்கள் இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆர்பிஐ தரவுகள்படி, ஆகஸ்ட் 4, ஆகஸ்ட் 11, ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய சனிக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்காது. அதேபோல, சுந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியும், கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஆகஸ்ட் 26ஆம் தேதியும் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
Sorry, no posts matched your criteria.