India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுநீர் ஏன் மஞ்சள் நிறத்தில் செல்கிறது? அதற்கு எப்படி தீர்வு காண்பது? என மருத்துவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். உடலில் போதிய நீரின்மை, காய்ச்சல், மதுபழக்கம், சிறுநீரகம், கல்லீரல் நோய் இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். போதிய தண்ணீர் குடிப்பது, மதுவை தவிர்ப்பது தீர்வைத் தரும். அதன்பிறகும் சிறுநீர் மஞ்சளாக சென்றால் மருத்துவரை அணுக அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டியிலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் வயநாடு அருகே முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கனமழை காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
சூரியும், தானும் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் என்பதால், மற்றவர்களின் வெற்றியை ஆரோக்கியமாகவே பார்ப்போம் என யோகிபாபு தெரிவித்துள்ளார். சூரிக்கும் சேர்த்து கோயிலில் அர்ச்சனை செய்ததாகவும், விடுதலை, கருடன் ஆகிய படங்களில் சூரியின் நடிப்பை பார்த்து மிரண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் போட்டி என்பது டீக்கடையில் நேரம் போக்குவதற்காக பேசப்படும் பேச்சு என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது. நாளை முதல் 4ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மக்களவையில் பாஜகவின் தலைமை கொறடாவாக சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 16 எம்பிக்கள் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இந்தியா கூட்டணி மற்றும் NDA கூட்டணி இடையே காரசார விவாதம் நடந்த நிலையில், இந்த நியமனம் நடைபெற்றது. தாமரையின் சக்கர வியூகத்தால் நாட்டில் அச்சமான சூழல் நிலவுவதாக பாஜகவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
நிதியாண்டிற்கான ITR கணக்கை நாளை (ஜூலை 31) சமர்ப்பிக்க கடைசி நாளாகும். விதிகளின்படி, டிச.31 வரை ITR தாக்கல் செய்யலாம், ஆனால் அதை இலவசமாக செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் வரை மட்டுமே. ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு ITR தாக்கல் செய்தால் ₹5,000, ₹5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ₹1000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும், வரித் தொகைக்கு வட்டியும் செலுத்த வேண்டும்.
➤ஒலிம்பிக் வரலாற்றில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற சாதனையை சாத்விக்-சிராக் படைத்துள்ளனர். ➤இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகை ₹250லிருந்து ₹350ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ➤ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட் மாதிரியா இடங்களில் மது விற்பனை சாத்தியமா என்பதை பரிசீலிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், காவலர்கள், பொதுமக்கள் என அனைவரையும் திமுகவினர் மிரட்டுவதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். டெண்டர் விடாமல் எப்படி சாலை போடப்பட்டது என உதவிப் பொறியாளர் கேட்டதற்கு சிவகங்கை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், ஆனால் முதல்வரோ, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தம்பட்டம் அடித்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் குறித்த டீப் ஃபேக் வீடியோவை பகிர்ந்ததற்காக எலான் மஸ்க் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். வீடியோவில் கமலா, ஜோ பைடனை முதியவர் எனவும், நாட்டை வழிநடத்த தனக்கு தெரியாது எனவும் பேசுகிறார். டிரம்ப், மஸ்க் போன்றோரின் பொய் தகவல்கள் மக்களுக்கு தேவையில்லை என கமலா கூறியுள்ளார். மஸ்கின் பதிவு X-இன் கொள்கையை மீறினாலும், அவர் உரிமையாளர் என்பதால் நடவடிக்கை இருக்காது என பலரும் விமர்சிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.