India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டருக்கு போட்டி கட்டணத்தில் 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே பெல்ஃபெஸ்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த ஹாரி டெக்டர், நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து களத்திலேயே நின்றிருந்தார். இதனால் ஐசிசி விதிப்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் பல்வேறு குறியீடு போர்டுகள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அதில், சிகப்பு வட்டத்திற்குள் மஞ்சள் வண்ண பின்னணியில் கருப்பு நிறத்தில் “100” எண் குறிப்பிடப்பட்டு இருக்கும் போர்டுக்கு என்ன அர்த்தம்? என தற்போது பார்க்கலாம். அந்த சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை வாகனத்தில் செல்லலாம் என்பதையே அந்த போர்டு குறிக்கிறது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 14ஆம் தேதி தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஆகஸ்டு முதல் வாரத்தில் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான பதிவு நடைமுறைகள் தொடங்கும் என்றும், கலந்தாய்வு விவரம், அட்டவணை குறித்து மருத்துவ கலந்தாய்வு குழு இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, அதிமுக சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். 100 கோடி நில அபகரிப்பு புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், திருச்சி முன்னாள் எம்.பி பரஞ்சோதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
ஹாலிவுட் என்றதும் திரைப்பட ரசிகர்களுக்கு அர்னால்டு ஸ்வார்ஷ்னேக்கரின் நினைவு நிச்சயம் வரும். போஸ்டரில் அவர் படம் இருந்தாலே கண்ணை மூடிக் கொண்டு படத்திற்கு செல்லும் அளவுக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு. டெர்மினேட்டர், ப்ரீடேட்டர், டோட்டல் ரீகால், எக்ஸ்பென்டபிள்ஸ் என இவர் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இன்று அவர் தனது 77வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பெண்கள் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த வர்ணனையாளர் பாப் பல்லார்டை, யூரோஸ்போர்ட் டெலிவிஷன் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. பெண்களுக்கான 4×100 மீட்டர் நீச்சல் போட்டியில் ஆஸி., வீராங்கனைகள் பதக்கம் வென்ற போது, வர்ணித்த பல்லார்ட் “பெண்கள் மேக்கப்போட்டு தங்களை அழகுப்படுத்தி கொண்டு சுற்றி திரிவார்கள்” என்று கூறியிருந்தார். இதற்காக அவர் தனது எக்ஸ் பதிவில் மன்னிப்பு கோரியுள்ளார்
தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என்று கூறியுள்ளது.
‘ராயன்’ படத்தை மிகச் சிறப்பாக இயக்கி, நடித்திருப்பதாக நடிகர் தனுஷை முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில, கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனவும் பதிவிட்டுள்ளார். இதற்கு படத்தில் நடித்த சந்தீப் கிஷன் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 26ஆம் தேதி வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற, தெலங்கானாவில் 41 நாள்கள் ஹோமம் நடத்தப்படும் என ஷியாமளா கோபாலன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் நல்லா சுரேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தெலங்கானாவில் 150 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் பள்ளி ஒன்று கட்டப்படும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக கமலா அதிபர் வேட்பாளராக வரவேண்டும் என சமீபத்தில் 41 நாள்கள் ஹோமம் நடத்தினார்.
தொடர் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அங்கு மொத்தமுள்ள 6 தாலுகாக்களிலும் (உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர்) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்றும் அங்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.