news

News July 30, 2024

OLYMPICS: புதிய சாதனை படைத்தார் மனு பார்க்கர்

image

பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸில் கலப்பு இரட்டையருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பார்க்கர், சரப்ஜோத் சிங் இணை 16-10 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. ஏற்கெனவே மகளிர் தனிநபர் பிரிவில் மனு பார்க்கர் வெண்கலம் வென்றிருந்தார். ஆதலால் இது அவரின் 2ஆவது பதக்கம். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையை பார்க்கர் படைத்தார்.

News July 30, 2024

நிலச்சரிவு அனைவருக்குமான பாடம்: அன்புமணி

image

மலை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி, வயநாடு நிலச்சரிவின் மூலம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்த அவர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News July 30, 2024

ரயில்வேயில் 7,951 காலியிடம்: விண்ணப்பப்பதிவு துவக்கம்

image

ரயில்வேயில் 7,951 இளநிலை பொறியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதில் 7,934 இடங்கள் இளநிலை பொறியாளர்களுக்கானது. எஞ்சிய பணியிடங்கள், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், கெமிக்கல் மேற்பார்வையாளர் உள்ளிட்டவற்றுக்கானது. <>https://www.rrbapply.gov.in/#/auth/landing <<>>என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

OLYMPICS: 2ஆவது பதக்கம் வென்றது இந்தியா

image

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா 2வது பதக்கம் வென்றது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இன்று கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியா, தென் கொரியா மோதின. இதில் இந்தியாவின் மனு பார்க்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. 10 மீ. மகளிர் ஒற்றையர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை மனுபார்க்கர் அண்மையில் வெண்கலம் வென்றிருந்தார்.

News July 30, 2024

10ஆம் வகுப்பு படித்தோருக்கு மலேசியாவில் வேலை

image

10ஆம் வகுப்பு படித்தோர் மற்றும் அதற்கும் குறைவாகப் படித்தோருக்கு மலேசியாவில் கட்டுமானப் பணியாளர், ஹெல்பர், வெல்டர் வேலைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பு 22 – 50 வரை ஆகும். மாத ஊதியம் ₹27,746 – ₹49,547 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதிக்குள் <>https://www.omcmanpower.tn.gov.in/ <<>> தளத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்டுள்ளது.

News July 30, 2024

நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் வயநாடு

image

நாடாளுமன்றத்தில் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து, மீட்புப் பணிகளுக்கு உடனே ₹5,000 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்ய, கேரள எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நட்டா, நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தற்போது அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்டு தேவையான சிகிச்சை அளிப்பதே முக்கியம் எனத் தெரிவித்தார்.

News July 30, 2024

தயவு செய்து பாகிஸ்தான் வாங்க: அப்ரிடி

image

கடினமான நேரங்களில் கூட இந்தியாவுக்கு சென்று பாக்.,அணி விளையாடியதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என கூறிய அவர், பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா வர மறுப்பதை ஏற்க முடியாது என்றார். 2025இல் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாக்.,கில் நடைபெறும் நிலையில், அந்த போட்டிகளில் பங்கேற்க இந்தியா மறுத்துவிட்டது.

News July 30, 2024

BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

image

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, குமரியில் கனமழையும் பெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாளையும் நீலகிரி, கோவையில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

News July 30, 2024

கூடுதல் அதிகாரம் ஆபத்தை விளைவிக்கும்: துரை வைகோ

image

ஜனநாயகத்துக்கு எதிரான 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். வழக்கறிஞர்கள் சங்கத்தின் போராட்டத்தில் பேசிய அவர், சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களுக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய சட்டங்களில் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.

News July 30, 2024

வயநாட்டில் சவாலாகும் மீட்புப் பணிகள்?

image

வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 45 பேர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது. பாலம் உடைந்துள்ளதாலும், மழை தொடர்வதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு சென்றடைந்தபோதும் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல், அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மீண்டும் கோழிக்கோட்டிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!