news

News July 30, 2024

அதிமுகவினரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

image

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். உள்ளூர் மக்கள் சுங்கச்சாவடியில் ஆதாரை காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அரசின் வாய்மொழி உத்தரவை ஏற்க மறுத்த அவர்கள், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்ய முயன்றபோது, பலரது சட்டை கிழிந்தது.

News July 30, 2024

பாரிஸ் நகருக்கு புயல் எச்சரிக்கை

image

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், பாரிஸ் நகருக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக்ஸ் 2024 ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான வீரர்களும், லட்சக்கணக்கான பார்வையாளர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் புயல் மற்றும் கனமழை காரணமாக, விளையாட்டுப்போட்டிகள் பாதிக்கப்படும் என தெரிகிறது.

News July 30, 2024

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்

image

மும்பையில் தனியார் மருத்துவமனையில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை திருப்திகரமாக இல்லாததால், அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மே 21ஆம் தேதி ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மறுநாள் குணமாகி வீடு திரும்பினார். தற்போது கண் பிரச்னையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

News July 30, 2024

3ஆவது பேட்டரை கண்டறியுங்கள்: மிதாலி ராஜ்

image

இந்திய மகளிர் அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை விரைவில் கண்டறிவது அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ஷஃபாலியும், ஸ்மிருதி மந்தனாவும் சிறப்பான தொடக்கத்தை வழங்குவதாகத் தெரிவித்த அவர், 3ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடக்கூடிய வீராங்கனையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், எதிர்வரும் டி20 உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்றார்.

News July 30, 2024

OLYMPICS: 124 ஆண்டுகளில் புது வரலாறு

image

1900ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆங்கிலோ இந்தியரான நார்மன் பிரிட்சார்ட் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றார். அதன்பிறகு, கடந்த 124 ஆண்டுகளில் இந்தியா சார்பில் வேறு யாரும் ஒரே ஒலிம்பிக்ஸில் 2 பதக்கங்களை வென்றதில்லை. இந்நிலையில், 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸில் மனு பார்க்கர், தனிநபர், கலப்பு இரட்டை பிரிவு துப்பாக்கிச்சுடுதலில் 2 வெண்கலம் வென்று புது வரலாறு படைத்துள்ளார்.

News July 30, 2024

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

image

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இப்புராஹிம், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இப்புராஹிம் ₹70 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று சிக்கினார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்து விமர்சித்த நிலையில், அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் தலைமை உத்தரவிட்டுள்ளது.

News July 30, 2024

EVM-VVPAT தீர்ப்பை மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

image

இவிஎம் வாக்குகளையும், விவிபாட் ஒப்புகை சீட்டையும் 100 சதவீதம் சரிபார்க்க முடியாது என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு, ஏற்கெனவே தாங்கள் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான எந்த காரணம் இல்லை என்ற கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

News July 30, 2024

OLYMPICSல் 2வது பதக்கம்: மோடி வாழ்த்து

image

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் 2ஆவது பதக்கத்தை இந்தியா வென்றுள்ளதற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மனு பார்க்கர், சரப்ஜோத் சிங்கிற்கு வாழ்த்துகள். 2 பேரும் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளனர். குழுவாக இணைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று பாராட்டியுள்ளார். இந்த வெற்றியை கண்டு, இந்தியாவே மகிழ்ச்சியில் உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

வெளிநாடு வேலை வேண்டுமா? இதைப் பாருங்கள்

image

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் <>https://www.omcmanpower.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்தை நடத்துகிறது. இதில் தற்போதைய வேலைவாய்ப்புகள் என்ற பகுதியில், எந்தெந்த வெளிநாடுகளில் வேலை உள்ளது என்பது குறித்த அறிவிப்பும், அதிலேயே விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளன. Way2News பயனாளர்களே இத்தகவல் உங்களுக்கு பயனுடையதாக இருந்திருக்கும். இதை வேலைதேடும் நண்பர்களுக்கும் பகிரலாமே.

News July 30, 2024

வயநாடு துயரம்: நடிகர் விஜய் இரங்கல்

image

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்ததாக, நடிகர் விஜய் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!