India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கபினி அணையிலிருந்து வினாடிக்கு 1,90,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல, கேஆர்எஸ் அணையிலிருந்தும் வினாடிக்கு 1,10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கனமழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் <
இலங்கை அணி பொறுப்புணர்வு இல்லாமல் விளையாடியதே, இந்தியாவிடம் தோல்வியடைய காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார். 2ஆவது போட்டியில் இலங்கை கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்ற அவர், ஹசரங்கா மற்றும் தசுன் சனகா அவுட்டான விதம் பள்ளிக்குழந்தைகள் விளையாடுவது போல இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளது. முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை, படக்குழு இன்று வெளியிடவுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவில் சிக்கி தமிழர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக, அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர், சூரல்மலைப்பகுதியில் கட்டட வேலைக்கு சென்ற நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானது தெரியவந்துள்ளது. அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கண்கவர் இயற்கை பேரழகை கொண்ட கேரளா, ஆண்டுதோறும் ஓர் பேரிடரை சந்திக்க நேரிடுகிறது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் இம்மாநிலம், மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாத்து வருகிறது. இந்த சூழலில், இயற்கை பேரிடர் மற்றும் சுகாதார பேரிடரை ஒவ்வொரு ஆண்டு எதிர்கொள்கிறது. 2018இல் கனமழையில் சிக்கி 483 பேர், 2019இல் பருவ மழையில் 470 பேர், 2020இல் நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர்.
பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர், வளர்ச்சிப்பாதையை நோக்கி இந்தியா பயணித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். உலகின் 5ஆவது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, விரைவில் 3ஆவது இடத்தை பிடிக்கும் என்ற அவர், கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் அளவு 3 மடங்கு அதிகரித்து ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.
இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து, ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைதான 26 மீனவர்களில் 23 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், 3 மீனவர்களுக்கு 18 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, 3 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மருத்துவ காப்பீடு கட்டணத்தை 10% உயர்த்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை, காப்பீடு நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் நவம்பர் 1ஆம் தேதி முதல் 10% அதிகரிக்கிறது.
Sorry, no posts matched your criteria.