India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் சரப்ஜோத் சிங், விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஹரியானாவைச் சேர்ந்த இவர், 13 வயதில் கால்பந்து வீரராக விரும்பினார். பின்னாளில் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் அதிகரித்ததால், அதில் கவனம் செலுத்தினார். ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் பெற்றோரின் அனுமதியுடன் 2019 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு தங்கம் வென்றார்.
சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக உண்ணாவிரதம் அறிவித்துள்ள அதிமுக, போராட்டத்திற்கு அனுமதி கோரியிருந்தது. இதற்கு, மனுதாரர் கோரும் இடத்தில் அனுமதி அளிக்கப்படுவதில்லை என பதிலளித்த காவல்துறை, மாற்று இடத்தில் போராட்டம் நடத்தலாம் என தெரிவித்தது.
ஒரு மாநிலத்தின் பெயர் பட்ஜெட்டில் இல்லை என்றால், அந்த மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக அர்த்தம் இல்லையென நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் தாக்கல் செய்த 2004-2005 மத்திய பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம் பெறவில்லை என அவர் பதிலளித்தார்.
பிரபல நடிகரும் கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதாகும் அவர், 1979ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை 120 படங்களில் நடித்திருக்கும் அவர், கடைசியாக ‘தாதா’ படத்தில் நடித்தார். அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் மகள் சுஹாசினி, தனது தந்தை நலம்பெற்று வருவதாக கூறியுள்ளார்.
கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு நிகழ்ந்துள்ளதாக, முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியானதாக வேதனை தெரிவித்த அவர், மீட்புப் பணிகள் துரிதமாக நடக்கிறது என்றார். மேலும், 48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை பெய்ததாக குறிப்பிட்ட அவர், நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை கண்டறிய மோப்ப நாய் அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறினார்.
உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வழங்கக்கோரி உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், இலங்கை, மலேசியா, பிரான்சில் தமிழில் அறிவிப்பு வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் தமிழில் அறிவிப்பு இல்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க விமான போக்குவரத்து துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நியூசிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு அதிக உணவு கொடுத்து, அதன் இறப்புக்கு காரணமான பெண்ணுக்கு ₹60,000 அபராதம், 2 மாத சிறை தண்டனை மற்றும் ஒராண்டுக்கு நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நுக்கி என பெயரிடப்பட்ட நாயை வளர்த்து வந்த அப்பெண், அதற்கு தினமும் பிஸ்கெட், கோழி இறைச்சி என அதிகப்படியான உணவு வழங்கியுள்ளார். இதனால், உடல் எடை அதிகரித்ததால், மூச்சு விட சிரமத்திற்கு உள்ளான நாய் உயிரிழந்தது.
தமிழக பாஜகவுக்கு விரைவில் பொறுப்புத்தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் சர்வதேச அரசியல் படிப்புக்காக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 28இல் லண்டன் செல்கிறார். 6 மாத படிப்பிற்காக அவர் செல்ல உள்ளதால், அதற்கு முன்னதாகவே பொறுப்பு தலைவரை நியமிக்க, மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை வரும் 11ஆம் தேதி திருப்பூரில் அண்ணாமலை கூட்டியுள்ளார்.
மிஷன் 2047 என்பதற்கான முதல் படியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், சுகாதாரத்துறைக்கு ₹1.46 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் நகர்ப்புற வளர்ச்சிக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜம்மு காஷ்மீரை மேம்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 500 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 31) கடைசி நாளாகும். சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் Apprentice ஆக பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-25. கல்வி தகுதி: டிப்ளமோ. ஊதிய விவரம்: ₹15,000. மேலதிக விவரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.