India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளர் மேத்யூ மோட் (Matthew Mott), அப்பதவியில் இருந்து விலகியதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான அவர், 2022 முதல் நான்கு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், 2024 டி20 உலகக்கோப்பை தோல்வி காரணமாக, அவர் இடையிலேயே விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
பேடிஎம் நிறுவனம் இந்தியாவின் முதல் NFC கார்டு சவுண்ட் பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. UPI பரிவர்த்தனைக்கு ஏதுவாக வணிகர்கள் சவுண்ட் பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், UPI பரிவர்த்தனை மட்டுமின்றி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்யும் வகையிலான ஒருங்கிணைந்த சவுண்ட் பாக்ஸை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்து 10 நாள்கள் பயன்படுத்த முடியும்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 44ஆவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் உபரிநீர் முழுமையாக 16 கண் மதகுகள் வழியாகவும், கிழக்கு, மேற்கு கரை கால்வாய்கள் மூலமாகவும் வெளியேற்றப்படுவதால், சுமார் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறும். மேட்டூர் அணை வரலாற்றில் கால்வாய் பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்பது, இது 13ஆவது முறையாகும்.
இந்தியா இலங்கை இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் மைதானத்தில் மூடப்பட்டிருந்த தார்பாய்கள் அகற்றப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் டாஸ் போடப்படும் எனத் தெரிகிறது. மழையின் தாக்கம் பெரிதாக இல்லாததால், போட்டிக்கான ஓவரில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
RCB அணியின் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக விளையாடலாம் என தெரிகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் சரியாக விளையாடாத காரணத்தால், RCB அணி அவரை
தக்கவைத்துக்கொள்ள விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அடுத்த சீசனில் அவரை ஏலத்தில் எடுக்க CSK, DC, PBKS அணிகள் ஆர்வம் காட்டுவதாகவும், அதில் CSK அணிக்கு அவர் வரலாம் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
2014 -2023 வரை மோடி தலைமையிலான மத்திய அரசு சுமார் 12.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நலன் குறித்து முதலை கண்ணீர் வடிக்கும் காங்., தனது ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என விமர்சித்த அவர், மோடி அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், வேலையின்மை அளவு 2022-23ஆம் ஆண்டில் 3.2% குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கேரளாவில் நேரிட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. மேலும், நிலச்சரிவு நிகழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் மீட்பு மற்றும் சீரமைப்புப்பணிகளுக்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதியுதவியை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
2028 அமெரிக்க ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். பாரிஸில் ‘ஒலிம்பிக் கிரிக்கெட்’ தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், “ஆண்கள், பெண்கள் இருவருக்குமான கிரிக்கெட்டும் 2028 அமெரிக்க ஒலிம்பிக்கில் இடம்பெற வாய்ப்புள்ளது” என்றார். இதுவரை ஒலிம்பிக்கில் ஒரே ஒருமுறை மட்டும் <<13734877>>கிரிக்கெட் <<>>நடந்துள்ளது.
குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் டாப் 5 வங்கிகளை அறிந்து கொள்வோம். ஐசிஐசிஐ வங்கி 10.65%, HDFC வங்கி 10.75%, கோடக் மஹேந்திரா வங்கி 10.99%, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 11.15%, பஞ்சாப் நேஷனல் வங்கி 12.75% வட்டியில் தனிநபர் கடன் வழங்குகின்றன. இந்த விகிதம், நீங்கள் பணிபுரியும் நிறுவனம், சம்பளம் மற்றும் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மாறுபடலாம். கூடுதல் விவரங்களுக்கு வங்கிக்கிளையை அணுகவும்.
வடலூரில் ஈட்டி தாக்கி மாணவன் மூளைச்சாவு அடைந்த விவகாரத்தில், பள்ளியின் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு மைதானத்தில் சிலம்பம் பயிற்சி செய்து கொண்டிருந்த மாணவன் கிஷோரின் தலையில் வேறு ஒரு மாணவர் வீசிய ஈட்டி தாக்கியது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிஷோர், நேற்று மூளைச்சாவு அடைந்தார். இந்த விவகாரத்தில் பிடி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.